பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 பராசக்திக்கு வணக்கம்

காதல் மட்டும்தான் மாயைப் போக்கு உடைத்துத் திகழ்கிறதா,என்ன? வாழ்வும் வாழ்வின் ஆரம்ப முடிவுகளும் ௯டத்தான் மாயையின் வினேதப் பண்புடன் விளங்குகின்றன.

“ஞாலமுற்றும் பராசக்தி தோற்றம்
ஞாலமென்ற விளக்கினை ஏற்றிக்
காலமுற்றுந் தொழுதிடல் வேண்டும்
காதலென்பதோர் கோயிலின் கண்ணே!”

பாரதியின் பராசக்தி வணக்கப்பாடல் இது.

உலகம் பராசக்தி வடிவம் எனவும், அம்மாதாவைத் தொழ விழைவோர் ‘காதலெனும்’ கோயில் எடுக்க வேண்டுமெனவும், அக்கோயிலின் கண்ணே ஞாலம் என்கிற விளக்கை ஏற்றிக் கைதொழவேண்டும் எனவும் சொல்கிற பாடல் இது.

“யாதுமாகி நின்றாய்-காளி
எங்கும் நீ நிறைந்தாய்!”

பாரதியின் இத் தவமொழிக்கும் அடிப்படையாக அமைந்திருக்கும் கடவுள் கொள்கைக்கும். அடிநாதம் அனுப்புகிறாள், பராச்க்தியின் பிறிதொரு

வடிவம் கொண்ட காளிமாதேவி.

            63