பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பொதுப்படையான தத்துவம். ஆகவே, தெய்வங்களின் பெயர் மாற்றங்களையோ, உருவத் திரிபுகளையோ மனத்தில் கொண்டு மயங்கித் திரிதல் வீண்செயல் என்பதே தத்துவ வாதிகளின் வாதமாகும்.

“வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
வேதம்புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றவ்
வேதமறியாதே!
நாமம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
நான்மறை கடறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றே
நான்மறை கண்டிலதே!...”

இதோ, பாரதி சாட்சி நிற்கிறார்:

பாரதிக்குச் சாட்சியாக அமைந்திடும் உண்மையாளனின் கருணையும் அனுதாபமும் இந்த வாழ்க்கைக்கு வேண்டும். அவ்வாறு கைகூடி வந்துவிட்டால், அப்புறம். இந்தப் பூலோக வாழ்க்கை விளையாட்டுக்கு ஏற்படும் அந்தமும் ஆனந்தமும் தனிச்சிறப்புக்குரியன என்பதும் உண்மை!

நிறைந்தது.

64