பக்கம்:கவிஞர் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிசிர் ஆந்தையார்

9



கொண்டான்: உலக வாழ்வை நீத்தான். ‘நீ முன்னே போ: நான் பின்னே வருகிறேன்’ என்று புலவர் சொன்னார். உடம்பு இரண்டு, உயிர் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது அவர்களுடைய கட்பு. தம் நண்பன் இறந்ததைக் கண்ட புலவர், அவன் இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை. விரதமிருந்து உயிர் நீத்தார். அதைக் கண்டு மூன்றாவது முறையாகப் புலவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘நட்பென்றால் இதுவல்லவா உத்தமமான நட்பு!’ என்று மக்கள் எல்லோரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/11&oldid=1525689" இலிருந்து மீள்விக்கப்பட்டது