பக்கம்:கவிஞர் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரான் மலை என்று ஒரு மலை இருக்கிறது. அதற்கு மிகப் பழைய காலத்தில் பறம்பு மலை என்று பேர். அங்கே பாரி என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். இப்போது ஜமீன்தார் என்று சொல்லுகிறோமே, அவர்களைப் போன்றவர்களே அந்தச் சிற்றரசர்கள். அந்தக் காலத்தில் அவர்களை வேளிர் என்று சொல்வார்கள். மகள் என்றால் ஒருத்தியையும் மகளிர் என்றால் பலரையும் குறிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? அந்த மாதிரியான பெயர்களே வேள், வேளிர் என்பவையும்.

பாரி வேளுடைய நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பேர். அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு மலை நல்ல வளப்பமுடைய மலை. அடர்ந்த காடுகளை உடையது. பாரியி னுடைய பெருமைக்கு அவன் காடு காரணம் அன்று. அவன் தன்னிடம் வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறவன். அந்தப் பழங்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிந்த கொடையாளிகள் சிலர் இருந்தார்கள். அவர்களை வள்ளல் என்று சொல்வார்கள். ஏழு வள்ளல்களைப்பற்றிப் புலவர்கள் பாராட்டிக் கவி பாடியிருக்கிறார்கள். அந்த ஏழு பேருக்குள் பாரியும் ஒருவன்.

பாரி வேளின் புகழ் பரவியதற்கு அவனுடைய அரசாங்கப் புலவராகக் கபிலர் என்ற பெரியவர் இருந்தது முக்கிய காரணம். புலவர்கள் யாவரும் ஒருங்கே போற்றும் பெருமை கபிலருக்கு இருந்தது. பெரிய அறிவாளி; கல்விக் கடல்; அற்புதமான கவிஞர்; குணமலை. அவர், மதுரை, உறையூர் முதலிய இடங்களில் பாண்டியனிடமோ சோழனிடமோ புலவராக இருந்திருக்கலாம், அவருக்குப் பாரி வேளிடம் அளவற்ற அன்பு உண்டாகிவிட்டது. அதனால் பறம்புமலையில் பாரியின் அவைக்களப் புலவராகவே இருந்துவிட்டனர். பாரியும் கபிலரும் உடல் இரண்டு, உயிர் ஒன்றாகப் பழகினர்கள்.

பாரிக்கு அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்கள் இருந்தார்கள். நல்ல குணமும் அழகும் உள்ளவர்கள். அவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து, இனிய கவிகளைப் பாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/12&oldid=1525690" இலிருந்து மீள்விக்கப்பட்டது