பக்கம்:கவிஞர் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலர்

11



படி செய்தார் கபிலர். தமிழில் ஆர்வம் உடையவர்கள் யாராக இருந்தாலும் கபிலரைக் கண்டு வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

ஒரு சமயம் பாண்டியனுக்குப் பாரி மகளிரைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஒரு தாதுவனை அனுப்பினான். பாரி, கபிலருடைய யோசனையைக் கேட்டான். “அரசருடைய அந்தப்புரத்தில் பல அரசிகளோடு ஒருத்தியாக வாழ்வதனால் பயன் இல்லை” என்று அவர் கூறினார். பாரிக்கும் அது சரியென்றே பட்டது. என் பெண்களைக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்துச் சொல்லிவிட்டான். அதைக் கேட்டுப் பாண்டியனுக்குப் பாரியின்மேல் கோபம் உண்டாயிற்று. ---

சில நாள் கழித்துச் சோழனுக்கும் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று. அவனும் பாரியினிடம் ஆளை அனுப்ப, அவனுக்கும் பாரி மறுத்துக் கூறிவிட்டான். இப்படியே சேரனும் பாரி மகளிரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினபோது அவனுக்கும் மறுத்துச் சொல்லியனுப்பினான் பாரி.

இப்போது சேர சோழ பாண்டியர் என்ற மூன்று பெரிய அரசர்களுக்கும் பாரியின்மேல் கோபம் வந்துவிட்டது. மூன்று பேர்களும் ஒன்றாகக் கலந்து பேசிக்கொண்டார்கள். “இந்தச் சின்ன அரசனுக்கு என்ன திமிர் இவனை அடக்கிவிட வேண்டும்” என்று தீர்மானித்தார்கள்.

மூன்று பேர்களுடைய படையும், பறம்பு மலையைச் சூழ்ந்து கொண்டன. மேலே கோட்டையை அடைத்துக்கொண்டு பாரி உள்ளே இருந்தான். ‘மலையைச் சுற்றிக் காவல் வைத்துவிட்டால் கீழே இருந்து மேலே ஒன்றும் செல்ல முடியாது. சோற்றுக்கு இல்லாமல் பாரியும் அவனைச் சேர்ந்தவர்களும் வாடிக் கடைசியில் வழிக்கு வருவார்கள்’ என்று மூன்று அரசர்களும் எண்ணிப் படைகளைக் கீழே நிறுத்தி யிருந்தார்கள். ஆனால் விசாலமான பறம்பு மலையில் பாரியின் ஆட்களுக்கு வேண்டிய பொருள்கள் கிடைத்தன. இதைக் கீழே முற்றுகையிட்டிருந்த மன்னர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணினார் கபிலர். ஒரு பாட்டை எழுதி அனுப்பினார். “நீங்கள் பறம்பு மலையைப்பற்றி நன்றாகத் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/13&oldid=1525691" இலிருந்து மீள்விக்கப்பட்டது