பக்கம்:கவிஞர் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக் காடர்

ழைய காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலர் சேர்ந்துகொண்டு, பழைய தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்து வந்தார்கள். புதிய நூல்களை இயற்றினார்கள். தமிழ் நாட்டில் யாரேனும் புலவர் ஒரு நூல் இயற்றினால் உடனே அதற்கு மதிப்பு வந்துவிடாது. மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குப் போய் அங்கே இருந்த புலவர்களிடம் அதை வாசித்துக் காட்டவேண்டும். புலவர் சபையில் முதல்முதலாக வாசித்துக் காட்டுவதை அரங்கேற்றல் என்பது வழக்கம். அரங்கு என்றால் சபை; சபையில் ஏற்றுதல் என்பது அதற்கு அர்த்தம். புலவர்களுடைய நூல்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப் பட்டால் தமிழ் நாட்டினர் அவற்றைப் பாராட்டுவார்கள். தமிழ்ச் சங்கப் புலவர்களுக்கு அத்தனை மதிப்பு இருந்து வந்தது.

படித்த புலவர்களாக இருந்தாலும் சிலருக்கு நல்ல குணம் இருப்பதில்லை. இப்போதுகூட அப்படித்தானே? நன்றாகப் படித்திருப்பான்; பட்டம் பெற்றிருப்பான். ஆனால் கெட்ட குணம் உடையவனாக இருப்பான். இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள்.

ஒரு காலத்தில் அந்தத் தமிழ்ச் சங்கத்தில் பொறாமை படைத்த புலவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் எழுதுவதுதான் கவி, மற்றவர்கள் பாட்டெல்லாம் மட்டம் என்ற நினைப்பு. உலகம் அப்படிச் சொன்னல் நம்புமா? நல்ல பாட்டை நல்ல பாட்டென்று வெளியில் உள்ளவர்கள் சொல்வார்கள்; ஆனால் சங்கப் புலவர்கள் அது நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார்கள். பாட்டைக் கேட்பவர்கள், “அட! இந்த அழகான கவியையா அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்?” என்று சொல்வார்கள். இதனால் சங்கப் புலவர்களிடம் இருந்த நம்பிக்கையும் மதிப்பும் குறைந்துவிடும் நிலை வந்துவிட்டது.

சங்கப் புலவர்களுக்கும் இது தெரிந்தது. எப்படியாவது தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார்கள். கெட்ட குணத்தைத் திருத்திக்கொண்டால் மதிப்பு உயரும். அப்படிச் செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. அயல் புலவர்களை முன்னுக்கு வரவொட்டாமல் அழுத்தவேண்டும்; தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/16&oldid=1525695" இலிருந்து மீள்விக்கப்பட்டது