பக்கம்:கவிஞர் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக் காடர்

17



அவர் பாட ஆரம்பித்தார். ஒரு காட்சியை வருணித்தார்.

ஆற்றங்கரையில் ஒரு மாமரம். அதன்மேல் காக்கை இருந்து கா, கா என்று கத்திக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் அடியில் ஒர் இடையன் கட்டுச் சோற்றை அவிழ்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். காக்கை கத்துவது அவனுக்குப் பொறுக்கவில்லை. அவன் கையில் கோல் இருந்தால் அதை வீசி எறிந்து காக்கையை ஒட்டியிருப்பான். கோல் இல்லை; ஆகவே வாயினால் ‘சு, சு’ என்று ஒட்டினான்.

இந்தக் காட்சியைப் பாட்டாகப் பாடினார் இடைக்காடர். காக்கை கத்துவதைப்போலவே கத்தினார். இடையன் ஓட்டுவதைப்போலவே ஓசை எழுப்பினார். அந்தச் சத்தங்களை அப்படியே எழுத முடியாது. பாட்டு வருமாறு:

ஆற்றங் கரையில் அருகிருக்கும் மாமரத்தில்
காக்கை இருந்து கஃகஃகெனக்-காக்கை தனை
எய்யக் கோல் இல்லாமல் இச்இச்இச் என்றானே
வையக்கோ னார்தம் மகன்.

இந்த ஒரு பாட்டோடு அவர் நிற்கவில்லை. இடையன் ஆட்டை ஓட்டுகிற சத்தம், தும்மும் சத்தம், ஆடு கத்துகிற சத்தம் இப்படியாக எழுத்தில் எழுத முடியாதபடி சில ஒலிகளையும். வைத்துக் கவிகளைச் சொன்னார்.

உள்ளே இருந்தவர்கள் ஒர் ஒலியைக் கேட்டு, எந்த எழுத்தால் அதைக் குறிக்கலாம் என்று யோசிப்பதற்குள் இடைக்காடர் பாட்டு முழுவதையும் பாடி முடித்து.அடுத்த பாட்டைத் தொடங்கி விடுவார். பாட்டுக்குமேல் பாட்டாக வந்தது. ஒவ்வொரு பாட்டிலும் இந்த மாதிரி எழுத முடியாத ஓசைகள் வந்தன. உள்ளே இருந்தவர்கள் எழுத முடியாமல் திண்டாடினார்கள். இதுவரையில் இவ்வாறான சங்கடம் அவர்களுக்கு ஏற்படவே இல்லை. எழுத்தாளர்களுக்கு அப்போது நல்லறிவு உண்டாயிற்று. இவ்வளவு காலமாக நாம் எவ்வளவோ உத்தமர்களுடைய மனம் புண்படும்படியாகச் செய்துவிட்டோம். இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது என்று எண்ணினார்கள். அவர்கள் எழுத்தாணியும் கையுமாக வெளியே வந்தார்கள். அதை இடைக்காடர் முன் வைத்து வணங்கினார்கள். “இதுவரைக்கும் நாங்கள் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று அழுதார்கள். புலவர்களும் வணங்கினார்கள். இடைக்காடர் அவர்களிடம் அன்

கவிஞர் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/19&oldid=1525703" இலிருந்து மீள்விக்கப்பட்டது