பக்கம்:கவிஞர் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கவிஞர் கதை



பாகப் பேசி, “இனிமேல் உங்கள் பொறாமையையும் வஞ்சகச் செயலையும் விட்டொழியுங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றார்.

அது முதல் கவிஞர்கள் தங்கள் நூல்களை நல்ல முறையில் தமிழில் அரங்கேற்றலானார்கள், இடைக்காடர் அப்போது பாடின நூல், எழுத்தாணியை எழுதவிடாமல் செய்துவிட்ட காரணத்தால் ‘ஊசி முறி’ என்ற பெயரைப் பெற்றது. ஊசி என்பது எழுத்தாணிக்கு ஒரு பேர். இடைக்காடரைப் புலவர்கள் யாவரும் பாராட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/20&oldid=1525705" இலிருந்து மீள்விக்கப்பட்டது