பக்கம்:கவிஞர் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசில்கிழார்

ல்லவர் என்பதில் தடை இல்லே. ஆனாலும்......” அவன் மேலே சொல்லாமல் இழுத்தான்.

“ஆனாலும் என்ன?” என்று புலவர் கேட்டார்.

“அவர் யார்? விளக்கமாகச் சொல்” என்றார் அரிசில்கிழார்.

“பேகன், பெரிய வள்ளல் என்ற புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. புலவர்களிடத்தில் எவ்வளவோ பிரியமாக இருக்கிறார், குடிமக்களிடத்தில் அன்பு உடையவரே. ஆனால் இங்கே அவரைப் பிரிந்து, தனியே வாழுகிறாள் அவருடைய மனைவி கண்ணகி. அந்த அம்மாளுக்கு எத்தனை துயரம் இருக்கும்!”

“ஏன் பிரிந்து வாழுகிறாள்?”

“அந்த அம்மாள் பிரியவில்லை. பேகனாரே பிரிந்து வாழ்கிறார்.”

“என்ன காரணம்?”

“ஒரு காரணமும் இல்லை. இல்வாழ்வில் சிறிய மனத்தாங்கல் நேர்வது இயல்புதான். அதைப் பெரிதாகக் கொள்ளலாமா? தங்களைப்போன்ற புலவர்கள் எங்கள் அரசருக்கு அறிவுரை கூறினால் மறுபடியும் அந்தப் பெண்மணி நல்ல வாழ்வைப் பெற லாம்.”

இவ்வாறு சொன்னவன் அரண்மனையைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவன். அரிசில் என்ற ஊரிலே பிறந்த அரிசில்கிழார் என்னும் புலவரிடந்தான் அவன் பேசினான்.

“நல்ல யோசனை. அப்படியே செய்யலாம்” என்றார் புலவர்.

அப்போது அங்கே வந்திருந்த கபிலர். பரணர், பெருங் குன்றுார்கிழார் என்பவர்களிடமும் இந்தச் செய்தியைச் சொன்னார். “ஒவ்வொருவரும் வள்ளல் பேகனிடம் சொல்வோம். அவன் தன் மனைவியோடு ஒன்றுபட்டு வாழவேண்டுமென்று பாட்டிலே வைத்துச் சொல்வோம்” என்றார். அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.

பழனியாண்டவன் கோயில் கொண்டிருக்கும் பழனிக்குப் பழங்காலத்தில் ஆவினன் குடி என்று பேர். அங்கே பேகன் என்ற சிற்றரசன் வாழ்ந்திருந்தான். பேகன், வேளிர்களில் ஒருவன். ஏழு பெரு வள்ளல்களில் இவனும் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/21&oldid=1525714" இலிருந்து மீள்விக்கப்பட்டது