20
கவிஞர் கதை
தமிழ்ப் புலவர்களிடத்தில் அவன் அதிகமான மதிப்பு வைத்துப் பழகினான். கடவுளிடத்தில் பக்தி நிறைந்தவன். ஏதோ சிறு சச்சரவு காரணமாக அவன் தன் மனைவி கண்ணகி என்பவளை விலக்கி வைத்திருந்தான். இந்த கநிலையை மாற்ற அரிசில் கிழார் மற்றப் புலவர்களேயும் சேர்த்துக்கொண்டார்.
எல்லோரும் பேகனிடம் சென்று பாடினார்கள். அவன் அவற்றைக் கேட்டு, மகிழ்ந்து, பரிசில் கொடுக்க வந்தான். “இந்தப் பரிசில் வேண்டாம்” என்று புலவர்கள் சொன்னார்கள். “என்னால் இயன்ற வேறு பரிசில் எது கேட்டாலும் தருகிறேன்” என்றான் அவன். “அப்படியானால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழவேண்டும்” என்று புலவர்கள் சொல்லி, ஆளுக்கு ஒரு கவி பாடினார்கள்.
“நீ கொடுக்கும் நகைகளும் பொன்னும் எனக்கு வேண்டாம். எனக்கு விருப்பமான பரிசிலை அளிக்க வேண்டும் என்று உனக்கு எண்ணம் இருந்தால், நீ உடனே ஒன்று செய்ய வேண்டும். உன்னுடைய அன்பைப் பெறாமல், அலங்காரங்களைச் செய்துகொள்ளாமல், தன் கூந்தலில் மலரைச் சூடிக்கொள்ளாமல் இருக்கிறாள் உன் மனைவி. அவள் மறுபடியும் மலரைச் சூடிக்கொள்ள வேண்டும். உடனே தேரில் குதிரையைப் பூட்டிப் புறப்படு” என்று அரிசில் கிழாரும் பாடினார்.
தமிழ் நாடு அறிந்த பெரும் புலவர்கள் சொல்வதைத் தட்டும் துணிவு பேகனுக்கு இல்லை. உடனே தன் மனைவியை அழைத்துக்கொண்டு பழையபடி வாழத் தொடங்கினான்.
★★★
சேர நாட்டை அந்தக் காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசன் ஆண்டு வந்தான். அவனைப் பார்க்கும்பொருட்டு அரிசில்கிழார் வஞ்சிமாநகருக்குச் சென்றார். சேரன் அவரை வரவேற்று உபசரித்தான். “என்னுடனே தங்கி என்னுடைய அவைக்களத்தைச் சிறப்பிக்க வேண்டும்” என்று அன்புடன் கேட்டுக்கொண்டான். அவனுடன் சில காலம் இருந்த புலவர், அவ்வரசனுடைய நல்ல குணங்களில் ஈடுபட்டார். நாளுக்கு நாள் அவனுடைய அன்பு ஓங்கி வந்தது: அவன் செய்த உபகாரமும் அதிகமாயிற்று. அவனப்பற்றிக் கவிபாட எண்ணினார் அரிசில்கிழார். அவனுடைய வீரத்தை