பக்கம்:கவிஞர் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கவிஞர் கதை



வெற்றிலை பாக்கை வாங்கினான். அரிசில்கிழாரிடம் கொடுத்தான். பொன் நிறைந்த பையையும் அளித்துவிட்டுப் பேசலானான்: “புலவர் பெருமானே!, தாங்கள் என்னிடம் பூண்டுள்ள கருணையை என்னென்று சொல்வேன்! இந்தச் சிறியேனைத் தங்களுடைய கவிதையால் இறவாதவன் ஆக்கிவிட்டீர்கள். தங்களுக்கு யான் என்ன பரிசிலைக் கொடுப்பேன்? இந்தக் கிழியில் ஒன்பதினாயிரம் பொன் இருக்கிறது. இதுவும் ஒரு பரிசிலா? கடைசியில் ஓர் எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ இந்த அரண்மனையையே தங்களுக்கு வழங்கிவிட்டேன்.”

உடன் இருந்தவர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது! அரிசில் கிழாரும் பிரமித்துப்போனார்.

“அரண்மனை மாத்திரம் அன்று. சிங்காசனமே தங்க ளுடையதுதான். அரசாட்சியும் தங்களேச் சார்ந்ததே. என்னேப் போன்ற அகங்காரிகள் அரசாட்சி செய்வதனால் போர்தான் மிகுதியாகிறது. அதல்ை மக்களுக்குத் துன்பம் உண்டாகிறது. தாங்கள் அரசாண்டால் காடு முழுவதும் அமைதி உண்டாகும். தங்களுக்குப் பகைவரே உண்டாக மாட்டார்கள்" என்று சொல்லி அவரை வணங்கினன்.

அரிசில்கிழார் சிறிது நேரம் பேச முடியாமல் திணறினார். பிறகு புன்முறுவல் பூத்தார். “எத்தனையோ அரிய பொருள்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருக்கிறேன். யானையைக் கொடுத்தவர்கள் உண்டு. நாட்டின் ஒரு பகுதியை அளித்தவர்கள் உண்டு. ஆனால் அரண்மனையையும் அரசாட்சியையும் புலவனுக்கு வழங்கியதாகக் கதையிலும் கேட்டதில்லை. நீ எல்லாக் கொடையாளிகளிலும் உயர்ந்தவன்.”

அரசன்: இந்தக் கொடையை ஏற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்த வேண்டும்.

அரிசில்கிழார்: ஏற்றுக்கொண்டேன்.

உடன் இருந்தவர்களுக்கு இரண்டாவது முறையாகப் பிரமிப்புத் தட்டியது.“நான் இப்போது அரசனைப்போல இருந்து, கொடுக்க ஆசைப்படுகிறேன். இந்த நாட்டை உனக்கே வழங்குகிறேன்” என்றார் புலவர்.

“கொடுத்ததை மீட்டும் வாங்குவது நியாயம் அல்லவே!”

“நான் இன்னும் சரியானபடி வாங்கிக்கொள்ள வில்லையே! வாங்கியதாக வைத்துக்கொண்டாலும் என்னுடைய பிரதிநிதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/24&oldid=1525726" இலிருந்து மீள்விக்கப்பட்டது