பக்கம்:கவிஞர் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கவிஞர் கதை



திடீரென்று அவை அங்கே எப்படி வந்தன என்று அவருக்குத் தெரியவில்லை. அவற்றை எடுத்து வைத்து, அரசனிடம் தெரிவித்தார். பாண்டியன், ‘இது ஏதோ இறைவன் திருவருளால் நேர்ந்த அற்புதம்!’ என்று எண்ணி, அவற்றை வாங்கிப் படித்துப் பார்த்தான். பார்த்தபோது அவனுடைய வியப்பு ஆயிரம் மடங்காயிற்று. அந்தச் செப்பேடுகளில் ஓர் இலக்கண நூலைக் கண்டான். சரியாக அறுபது சூத்திரங்கள் அடங்கிய நூல்; அகப்பொருளின் இலக்கணத்தைச் சொல்வது.

பாண்டியன் ஆனந்தக் கூத்தாடினான். தன் விருப்பம் நிறைவேறியதை எண்ணி இன்புற்றான். உடனே அந்தத் தாமிரத் தகடுகளைக் கொண்டுவந்து, தமிழ்ச் சங்கப் புலவர்களிடம் காட்டி, “இது இறைவன் திருவருளால் கிடைத்தது; பாருங்கள். இந்த நூலுக்கு உரை எழுதுங்கள்” என்று சொன்னான். அவர்களும் அதைப் படித்துப் பார்த்து, அது புது முறையான அகப்பொருள் இலக்கணமாக இருப்பதைக் கண்டு, அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்தார்கள். பாண்டியன் விருப்பப்படியே உரை எழுதத் தொடங்கினார்கள்.

அக்காலத்தில் தமிழ்ச் சங்க்த்தில் 49 புலவர்கள் இருந்தார்




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/40&oldid=1527460" இலிருந்து மீள்விக்கப்பட்டது