பக்கம்:கவிஞர் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கவிஞர் கதை



உரையின் அரங்கேற்றம் தொடங்கியது. ஒவ்வொரு புலவரும் தம் தம் உரையைப் படிக்கலாயினர். யாவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ருத்திரசன்மன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். பாண்டியனுக்குக் கவலை உண்டாகிவிட்டது.

‘அசரீரி வாக்கை நம்பி, இந்த ஊமைப் பிள்ளையைக் கொண்டு வந்து, இங்கே அமர்த்தியிருக்கிறோம்! இவன் கற்சிலைபோல் அல்லவா இருக்கிறான்! என்ன ஆகுமோ, தெரியவில்லையே’ என்ற எண்ணந்தான் அந்தக் கவலைக்குக் காரணம்.

இன்னும் சிலர் தம் உரைகளைப் படித்தனர். பிறகு மருதன் இளநாகனார் என்னும் புலவர் படித்தார். அப்போதுதான் அந்த ஊமைப் பிள்ளை சிறிது உடம்பை அசைத்தான். முறுவல் பூத்தான். அதைப் பார்த்துப் பாண்டியனுக்கு நம்பிக்கை உதயமாயிற்று. மறுபடியும் அந்தப் பிள்ளை சும்மா இருந்தான்.

அப்பால் நக்கீரர் தம் உரையைப் படிக்கத் தொடங்கினர். அப்போது ருத்திரசன்மன் அடிக்கடி கண்ணீர் விட்டான். கையைத் தட்டினான், உடம்பெல்லாம் புல்லரித்தது. சில சமயங்களில் முறுவல் பூத்தான். மற்றப் புலவர்கள் படித்தபோது உண்டாகாத உணர்ச்சி, அப்போது அவனுக்கு உண்டாயிற்று. அதனால் நக்கீரர் உரையே எல்லா உரைகளிலும் சிறந்தது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டார்கள். உண்மையில் அது பல வகையிலும் சிறப்பாக இருந்தது. பாண்டியன் நக்கீரருக்குப் பரிசுகளை வழங்கினன்.

இறைவன் அருளால் அகப்பட்ட அந்த நாலுக்கு ‘இறையனார் அகப்பொருள்’ என்ற பெயர் உண்டாயிற்று. அதைக் களவியல் என்றும் சொல்வதுண்டு. நக்கீரர் எழுதிய உரை, பின்பு எங்கும் வழங்கலாயிற்று. இன்றும் அந்த அகப்பொருள் இலக்கணமும் அதன் உரையும் இருக்கின்றன.

உரை எழுதிச் சிறப்புப் பெற்ற நக்கீரர் பெரிய புலவர். அவருடைய தகப்பனார் பள்ளிக்கூடத்து ஆசிரியர். ஆசிரியரைக் கணக்காயர் என்றும் அக்காலத்தில் சொல்வார்கள். அந்த ஆசிரியரிடம் எல்லோருக்கும் பெரிய மதிப்பு இருந்து வந்தது. அவர் பெயரைக்கூடச் சொல்லாமல், ‘மதுரைக் கணக்காயனார்’ என்றே சொல்லி வந்தார்கள். அவர் பிள்ளையாகையால் நக்கிரரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/42&oldid=1527462" இலிருந்து மீள்விக்கப்பட்டது