பக்கம்:கவிஞர் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காக்கையைப் பாடின பெண்


ல்லதங்கை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? பழைய காலத்தில் அப்படி ஒரு நாடகம் கடக்கும். நல்லதம்பி, நல்லண்ணன் என்ற பெயர்களைப்போல நல்ல என்ற சிறப்போடு கூடிய பெயர் நல்லதங்கை. மிகவும் பழங்காலத்திலும் நல்ல தங்கை என்ற பெயர் இருந்துவந்தது. அதே பெயர் இல்லாவிட்டாலும் அந்த அர்த்தத்தை உடைய பெயர் இருந்தது. செள்ளை என்பது தங்கைக்குப் பெயர். இப்போது அது தமிழில் மறைந்து போய்விட்டது. செல்லலு என்று தங்கையைக் குறிக்கத் தெலுங்கில் ஒரு சொல் வழங்குகிறது. நச்செள்ளை என்பது ஒரு பெயர். நல்லதங்கை என்பதுபோன்ற பெயர்தான் அது. ந என்பது பெருமையைக் காட்டுவது.

நச்செள்ளை என்ற பெயரோடு ஒரு பெண் புலவர் இருந்தார். சின்ன வயசிலேயே அவருக்குக் கவி பாடும் திறமை உண்டாகிவிட்டது. ஒரு பெண்ணினுடைய கணவர் வெளியூருக்குப் போனார். போய்க் கொஞ்சகாலம் ஆயிற்று. வியாபாரமோ தொழிலோ செய்து பணம் சம்பாதித்து வரத்தான் போனார். கொஞ்ச நாளாகவே அவருடைய மனைவிக்குச் சிறிது வருத்தம் உண்டாயிற்று. ‘போனவர், இன்னும் வரவில்லையே! எப்போது வருவாரோ!’ என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது நச்செள்ளையார் அங்கே வந்தார். அவர் சின்னப் பெண்ணாக இருந்த காலம் அது. கணவனை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து, ஆறுதல் சொன்னார். அப்போது ஒரு காக்கை விடாமல், ‘கா, கா!’ என்று கரைந்துகொண்டே இருந்தது, காக்கை கரைந்தால் யாராவது உறவினர் வீட்டுக்கு வருவார்கள் என்று சொல்வார்கள். அது நச்செள்ளையாருக்குத் தெரியும். அதனால், வருந்தின பெண்மணியைப் பார்த்து, ‘இதோ பார்; காக்கை கரைகிறது. உன் கணவர் இன்றாவது நாளையாவது நிச்சயமாக வந்துவிடுவார். வருத்தப்படாதே. அவரை வரவேற்கச் சித்தமாக இரு’ என்று சொன்னார்.

அவர் சொன்ன வாக்குப் பலித்தது. அன்று மாலையே ஊருக்குப் போயிருந்தவர் வந்துவிட்டார். அவருடைய மனைவியும் வருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/44&oldid=1530308" இலிருந்து மீள்விக்கப்பட்டது