இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காக்கையைக் பாடின பெண்
43
தம் நீங்கினாள். காக்கை பாடினியார் வாக்குப் பலித்ததைப் பாராட்டிப் புகழ்ந்தாள்.
அவளுடைய கணவர், “நீ நான் வரவில்லையே என்று மிகவும் வருத்தம் அடைந்தாயோ ?” என்று கேட்டார். அப்போது அருகில் இருந்த நச்செள்ளையார், “அதை ஏன் கேட்கிறீர்கள் ? எப்போதும் முகத்தில் ஒளியில்லாமல் வாட்டமுற்று இருந்தாள். நல்ல வேளை! காக்கை கரைந்தது. அதைக் காட்டி நான் ஆறுதல் சொன்னேன்” என்றார்.
"அப்படியா? அப்படியானால் அவளுக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நான் மிக்க நன்றி கூறவேண்டும்” என்றார் அந்த ஆடவர்.
“எனக்கா? சகுனம் சொல்லிய காக்கைக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது கரைந்ததைக் காட்டியல்லவா நான் ஆறுதல் சொன்னேன்” என்று சொன்ன நச்செள்ளையார் உடனே அந்தக் காக்கையைப் பாராட்டி ஒரு கவியைப் பாடினார்.