பக்கம்:கவிஞர் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கையைப் பாடின பெண் 45

இப்படி ஒரு பாட்டை கச்செள்ளையார் பாடினர். அதைக் கேட்ட அந்த மனிதரும் அவருடைய மனேவியும் வியப்பில் ஆழ்ந்த னர். மற்றவர்களுக்கும் இந்தச் சிறிய பெண் இவ்வளவு அழகான பாட்டைப் பாடியதைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. ஊரே புகழ்ந்தது. புலவர்களும் பாராட்டினர்கள். முதல் முதலாகக் காக்கையைப் பாடிய நச்செள்ளையாருக்குக் காக்கை பாடினியார் என்ற பட்டப் பெயர் உண்டாயிற்று. காக்கை பாடினியார் என்று தனியாகவோ, காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று சொந்தப் பெயருடன் சேர்த்தோ மக்கள் அவரைக் குறிக் கத் தொடங்கினர்கள். - . -

பிறகு அவர் பல பாடல்களைப் பாடினர். சேரன் அரசாண் டிருந்த சேர நாட்டுக்குச் சென்ருர். அப்போது ஆடு கோட் பாட்டுச் சேரலாதன் என்ற அரசன், சேர நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அவனிடம் சென்று, அவனேப் பாராட்டி, பத்துப் பாடல்களைப் பாடினர். அவற்றைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ந்து, ஒன்பது துலாம் பொன்னும் லட்சம் பொற் காசும் வழங்கினன். 'நல்ல ஆபரணம் செய்து போட்டுக்கொள் |ளுங்கள்” என்று சொல்லி அந்தப் பொன்னே அளித்தான். -

அதுமுதல் காக்கை பாடினியாருடைய புகழ் அதிகமாயிற்று. அவர் மதுரைக்கும் சென்று, அங்கே உள்ள சங்கப் புலவர்களைப் பார்த்துப் பழகினர். பாண்டிய மன்னனக் கண்டு, தம் புல மையை வெளிப்படுத்திப் பரிசு பெற்ருர்.

கவி பாடுவதிலே சிறந்த காக்கை பாடினியார், கவியின் இலக் கணம் நன்ருகத் தெரிந்தவர். கவியின் இலக்கணத்தை யாப் பிலக்கணம் என்று சொல்வார்கள். மிகவும் படித்த பெரிய புலவர் களே இலக்கணத்தை இயற்றும் அறிவைப் பெறுவார்கள்.

காக்கை பாடினியார் ஒரு யாப்பிலக்கணத்தை இயற்றினர். அது அவர் பெயராலேயே, காக்கை பாடினியம் என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் இயற்றியது தொல்காப்பியம். அகத்தி யர் இயற்றியது அகத்தியம். அதைப்போலக் காக்கை பாடினி யார் இயற்றியது காக்கை பாடினியம்.

முதல் முதலில் காக்கையைப் பாடத் தொடங்கிய நச்செள்ளை, இலக்கணம் இயற்றும் நிலைக்கு உயர்ந்து, சிறந்து கின்ருர் என்ருல் புழையகாலத்தில் பெண்களுக்கும் எவ்வளவு பெருமை இருந்தது ன்ன்பது தெரியவரும். - ' ' ' ' ' '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/47&oldid=686148" இலிருந்து மீள்விக்கப்பட்டது