பக்கம்:கவிஞர் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடு பெற்ற புலவர்

சோழ நாட்டில் உறையூரில் கிள்ளி வள்வன் என்ற சோழ அரசன் செங்கோல் ஒச்சி வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவ ரிடம் மிக்க அன்பு. எந்தக் காரியம் இருந்தாலும் அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களுக்கு உபசாரம் செய்வான். அவனேச் சார்ந்தவர்களும் அரண்மனைக்கு எந்தத் தமிழ்ப் புலவர் வக் தாலும் வரவேற்று, உபசரித்து, அரசனிடம் அழைத்துச் செல்வார்

ஐயூர் என்பது சிறிய ஊர். அங்கே ஒரு புலவர் இருந்தார். அவர் பெரிய புலவர் பெருங் கவிஞர். ஆனல் காலில்லா முடவர். அவர் தம் விருப்பப்படி பல இடங்களுக்குச் செல்ல முடியா விட்டாலும், அவருடைய பாட்டு பல ஊர்களுக்குச் சென்று: பரவியது. அவற்றைக் கண்ட மக்கள் அவற்றில் உள்ள சுவையை உணர்ந்து, புலவரைப் பாராட்டிஞர்கள். ஐயூர்ப் புலவர் என்றே யாவரும் அவரை அழைத்தார்கள். அவருக்குப் பெற்றேர் வைத்த பெயரை யாரும் சொல்வதில்லை! அவ்வளவு மரியாதை அவரிடம்; கடைசியில் அவருடைய சொந்தப் பெயரே மறைந்துபோயிற்று. ஐயூர் கிழார் அல்லது ஐயூர் முடவனர் என்றே அவரை எல் லோரும் குறிப்பிட்டுப் பேசினர்கள். கால் முடம் என்பதல்ை அவருக்கு எந்த விதமான குறைபாடும் இருக்கவில்லை, அவராகச் செய்துகொண்ட தல்லவே அது குணத்தில் குறைபாடு இருக் தால் இழிவாக கினைப்பார்கள். அங்கக் குறைவில்ை ஒருவரை இழிவாகச் சொல்லுவது அக்காலத்து மக்களுக்கு வழக்கம் இல்லை. ஐயூர் முடவர்ை என்று வழங்கும்போது மரியாதையாகவே சொன்னர்கள். . . . . . . . .

புலவருக்கு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. எவ்வளவுதான் சிறந்த புலவராக இருக் தாலும் பெரிய அரசர்களின் சபைகளுக்குச் சென்று, மற்றப் புல வர்களோடு சேர்ந்துகொண்டு தம்முடைய புலமையைக் காட்டி

பெருமை வளரும் அவருக்கும் திருப்தி உண்டாகும். சிறிய ஊரில் அடைந்துகொண் டிருப்பதை அந்தப் புலவர் ரும்பவில்லை. அவரை யாரேனும் புலவர்கள் வந்து பார்த்துப் போவார்கள். தமிழ் காட்டில் இன்ன இன்ன மன்னர் இப்படி இப்படி இருக்கிருர்கள் என்ற செய்தி அவர்கள் மூலமாக அவருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/48&oldid=686149" இலிருந்து மீள்விக்கப்பட்டது