பக்கம்:கவிஞர் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - கவிஞர் கதை

கேட்கப் புலவர் விரும்பவில்லை. வேறு யாரிடமேனும் சொல்வி வண்டிமாடு வாங்கலாம் என்று எண்ணினர்.

அக் காலத்தில், அவர் ஊருக்கு அருகில் தோன்றி யென்னும் மலக்கு அருகில் தாமான் என்ற சிற்றரசன் ஒருவன் இருந்தான். தோன்றி மலைக்குச் சொந்தக்காரன் ஆகையால் அவனத் தோன் மிக்கோன் என்று மக்கள் வழங்கினர்கள். அவனே அணுகித் தமக்கு ஒரு நல்ல காளேமாட்டைக் கொடுக்க வேண்டுமென்று கேட்கலாம் என்று புலவர் கினைத்தார். வேறு ஒருவருடைய வண்டியில் ஏறிக்கொண்டு தாமானிடம் போனர். -

அவன். புலவரை வரவேற்று உபசரித்தான். -

உங்களைப்பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். நேரே பார்த்த தில்லை. உடம்பு மிகவும் இளைப்பாக இருக்கிறதே!” என்ருன். "நாள்தோறும் உணவு உண்டால் உடம்பு கன்ருக இருக் கும்” என்ருர் புலவர், -

உணவு உண்ண முடியாதபடி வயிற்றில் ஏதாவது நோய் உண்டோ?' என்று கேட்டான் தோன்றிக்கோன்.

'வயிற்றில் பசி என்ற நோய் இருக்கிறது. அதற்கு மருந்து தினமும் கிடைப்பதில்லை. ஒருவேளை உணவு கிடைத்தால் அடுத்த வேளே கிடைப்பதில்லை: பட்டினிதான். இந்த வறுமை கிலையில் உடம்பு இளைப்பது வியப்பல்லவே?" . .

இதைக் கேட்டுத் தாமானின் உள்ளம் உருகியது. அவருக்கு உடனே நல்ல விருந்தளித்து இளேப்பாறச் சொன்னன். புலவர், தாம் வந்த காரியத்தைச் சொல்லத் தொடங்கினர். 'என் வறுமை யைப் போக்க வழி என்ன என்று யோசித்தேன். கிள்ளிவளவன் புலவர்களுக்கு வாரி வாரி வழங்குவதாகக் கேள்வியுற்றேன். அவனே அடைந்து, என் வறுமையையும் புலமையையும் புலப் படுத்தினுல் வறுமை ஒழியும், புலமை வளரும் என்று கினேக் கிறேன். என்னிடம் ஒரு வண்டி இருக்கிறது. அதில் பூட்ட எருது இல்லை. நீ ஒரு காளைமாட்டை வழங்கினல் வண்டியேறி உறை பூருக்குச் செல்வது எளிதாக இருக்கும். வேறு பொருளைக் கேட்டு, உனக்குத் தொல்லே கொடுக்க விரும்பவில்லை' என்ருர். தாமான் அதைக் கேட்டான். முன்பே அவர் நிலையை அறிக் திருந்தால் உபகாரம் செய்திருக்கலாமே என்று எண்ணி இரங்கினன். . . . . . . . . . .” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/50&oldid=686151" இலிருந்து மீள்விக்கப்பட்டது