மாடு பெற்ற புலவர் - - 45
இப்போதே உறையூருக்குப் போகவேண்டுமா? இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிச் செல்லலாமே!” என்ருன். புலவர் அவன் விருப்பப்படியே தங்கினர். தாமான் அவருடைய கவிகளைக் கேட்டு இன்புற்ருன். - . . . . . . .
ஒரு நாள் புலவர் விடை கேட்டார். "உங்களுக்கு வேண் டியது விடைதானே?' என்று சொல்லி ஒரு நல்ல எருதைக் கொண்டுவந்து நிறுத்தினன். விடை என்பதற்குக் காளை மாடு என்றும் ஒரு பொருள் உண்டு. இது போதுமா?’ என்று கேட் டான். 'போதும்” என்ருர் புலவர். -
"இதை நீங்கள் வாங்கிக்கொண்டு போவதானல் ஒரு காரி யம் செய்யவேண்டும்." -
என்ன?’ என்று கேட்டார் புலவர். பசுமாடுகளும் தருகிறேன். அவற்றையும் அழைத்துச் செல்லவேண்டும். அதோ பாருங்கள், அந்த மந்தையை உங்க ளுக்கு வழங்கிவிட்டேன்' என்று தாமான் தோன்றிக்கோன் சொன்னதைக் கேட்ட புலவர், பிரமித்துப் போய்விட்டார்.
என்ன! இவ்வளவுமா எனக்கு' என்று கேட்டார். கவிஞர். ・ 、・・・ ・ ・ ・ . 、", ...... & ...”. .