மூத்த குமாரளுகிய செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் அரசன். அவனே நெடுஞ்சேரலாதனுக்குப் பின் அரசனுக வருவதற்கு உரிமை உடையவன். அதுதான் முறை. அப்படியிருக்க, அவன் தம்பிக்கு எப்படி அரசு கிடைக் கும்! . . . . . . - . . . . . . . . . . . "
ஒருகால் செங்குட்டுவன் குறையாயுள் பெற்றவனே அப் படியால்ை இந்தப் பைத்தியம் அதை இவ்வளவு பேருக்கு கடுவில் சொல்லலாமோ என்று சிலர் கவலைப்பட்டார்கள்.
சில கணங்கள் சபையில் எவரும் ஒன்றும் பேசவில்லை. அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. செங்குட்டுவன் என்ன எண்ணின்ை என்பதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனல் இளங்கோவின் முகம் மாத்திரம் சிவந்தது. கண், கனலேக் கக்கி யது. அவர் அந்த கிமித்திகனே. கோக்கி, நீர் பெரிய ஆரூடம் சொல்லிவிட்டதாக எண்ணிப் பெருமை அடைய வேண்டாம். உம்முடைய ஜோசியத்தை நான் பொய்யாக்கப் போகிறேன்' என்று சொன்னர் அவர் குரலில் கோபம் தொனித்தது.