பக்கம்:கவிஞர் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - - கவிஞர் கதை

தெல்லாம் சுவாமிகள் என்று சொல்வதில்லையா? அதே பொருள் உடையதுதான் அடிகள் என்ற சொல்லும்.

இளங்கோவடிகள் கல்ல தமிழ்ப் புலமை உடையவர். கோவலன் கண்ணகி கதையை அழகிய காவியமாகப் பாடினர். அதற்குச் சிலப்பதிகாரம் என்று பெயர். தமிழ் காட்டில் இருந்த சேரசோழ பாண்டியர் என்னும் மூன்று மன்னர்களைப்பற்றியும் மூன்று நாடுகளைப்பற்றியும் அவர் விருப்பு வெறுப்பு இல்லாமல் பாடியிருக்கிருர், அந்தக் காலத்துத் தமிழ் நாட்டில் கலையும், தொழிலும், இசையும் இயலும் கூத்தும் விளேயாட்டும் நாகரிக மும் பண்பாடும் எப்படி வளர்ந்தன என்பதை அவர் நூலில் கன் ருகக் காணலாம். அதில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகையான தமிழும் இருப்பதல்ை அதை முத்தமிழ்க் காப்பியம் என்று சொல்வார்கள். கண்ணகியினுடைய பெருமையை அது மிக கன்ருக எடுத்துச் சொல்கிறது.

இளங்கோவடிகள், மண்ணே ஆளும் அரசைத் துறந்தாலும் ஞானச் செல்வத்தை ஈட்டினர் புவியரசராக வாழாவிட்டாலும் கவியரசராக வாழ்ந்தார். அதைவிடப் பெருமை வேறு ஒன்று உண்டா! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/56&oldid=686157" இலிருந்து மீள்விக்கப்பட்டது