இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தலைச் சாத்தனர்
சேரன் செங்குட்டுவன் கலைவளம் காணுவதற்காகப் போயிருந்தான். அங்கே வாழ்ந்த மலைவாணர்களாகிய வேடர்கள் மான் கொம்பு, கவரிமானின் வால் முதலிய காணிக்கைகளோடு மன்னனே வந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் தாம் கண்ட அதிசயம் ஒன்றை அரசனுக்கு எடுத்துச் சொன்னர்கள். ‘அரசே, ஒரு பெண் தன் கணவனே இழந்து வந்து, இந்த மலேயின் மேல் ஏறி, ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்றுகொண் டிருந்தாள். அப்போது வானவர்கள் விமானத்தில் அவள் கணவனேடு வந்து, அவளே அழைத்துக்கொண்டு சென்றதைக் கண்டோம்' என்ருர்கள். அதைக் கேட்டபோது அங்கே இருந்த சீத்தலைச் சாத்தனர், "எனக்கு அந்தப் பெண்ணேப் பற்றிய செய்திகள் தெரியும்' என்று சொன்னர். அப்போது