பக்கம்:கவிஞர் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கவிஞர் கதை




பாண்டியன் தான் செய்த பிழையை உணர்ந்துகொண்டான். புதிதாகப் போட்ட வரியை நீக்கிவிட்டான்.

புலவருடைய புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது. சோழ நாட்டில் உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவர்களிடம் அளவு கடந்த அன்பு. பிசிராந்தையாரைப்பற்றி அவன் கேள்வியுற்றான். அவரிடம் அவனுக்கு அன்பு உண்டாயிற்று. மதுரைப் பக்கத்திலிருந்து யார் வந்தாலும் பிசிராந்தையாரைப் பற்றி விசாரிப்பான். மதுரைக்குப் போகிறவர்கள் மூலம் அந்தக் கவிஞரிடம் கொடுக்கும்படி பரிசுகளைக் கொடுத்தனுப்புவான். பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ் சோழனிடம் பேரன்பு உண்டாயிற்று. அவனைப்பற்றிய விவரமெல்லாம் அவர் தெரிந்துகொண்டார்.

இந்த இரண்டு பேரையும் தெரிந்து கொண்ட புலவர்களும் மற்றவர்களும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த நட்பைக் கண்டு வியப்படைந்தார்கள், ‘ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஆனாலும் எவ்வளவு சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்! நட்புக்கு உள்ளந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/8&oldid=1525685" இலிருந்து மீள்விக்கப்பட்டது