பிசிர் ஆந்தையார்
7
காரணம்போல் இருக்கிறது? என்று பேசிக்கொண்டார்கள்.
பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து கவிதை எழுதி அனுப்புவார். அதைப் பார்த்துப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவான் சோழ அரசன். ஒரு நாள் அவர் வானத்தில் ஓர் அன்னப்பறவை பறப்பதைப் பார்த்தார். அது அன்னமோ வேறு பறவையோ நிச்சயம் இல்லை. ஆனாலும் அவருக்கு அது அன்னம்போலத் தோன்றியது. இமயமலையில் மானச சரஸ் என்ற பெரிய ஏரி இருக்கிறது. அங்கே அன்னங்கள் வாழும். அன்னம் தமிழ் நாட்டில் தென்கோடியில் உள்ள கன்யாகுமரிக்குச் சென்று, அங்குள்ள மீனை உண்டுவிட்டு, இமய மலைக்குப் பறந்து செல்வதாகக் கவிஞர் எண்ணினார். அதைப் பார்த்து ஒரு பாட்டுப் பாடினார். ‘ஏ ஆண் அன்னமே! நீ குமரி மீனை உண்டு இமய மலைக்குத் தானே போகிறாய்? போகிற வழியில் சோழ நாடு இருக்கிறது. அதில் உள்ள உறையூர் வழியே போனால் கோப்பெருஞ் சோழனுடைய அரண்மனையைக் காண்பாய். அங்கே மெதுவாக உள்ளே போய் அவனைப் பார். நான் பிசிராந்தையாருக்கு வேண்டியவன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; உடனே அவன் உனக்கு வேண்டியதைக் கொடுத்து உன் பேடைக்கு நல்ல ஆபரணங்களைக் கொடுப்பான்’ என்று ஒர் அழகான பாட்டைப் பாடினார். அன்னம் போயிற்றோ என்னவோ? அந்தப் பாட்டுச் சோழ மன்னனிடம் போயிற்று. அடடா! அதைப் பார்த்து அவனுக்கு உண்டான ஆனந்தத்தை என்னவென்று சொல்வது!
சோழன், ‘இனிமேல் நமக்கு ஆட்சி வேண்டாம்’ என்று உலக வாழ்வை வெறுத்துத் துறவி ஆனான். அப்போதும் பிசிராந்தையாருடைய நட்பை மறக்கவில்லை. அவனுடைய உடம்பு மெலிந்து மரணதசை உண்டாயிற்று. ஒரு முறையாவது பிசிராந்தையாரைக் கண்ட பிறகு உயிர் விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அவர் நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கையும் தோன்றியது. உடன் இருந்தவர்களிடம், “பிசிராந்தையாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மாத்திரம் எனக்கு இருக்கிறது. எங்க