உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இளங்கால்இங்ங்ணம் உலவுதோ? என்றுநகரத்தார் நினைக்கும்படிநளினம் மலிந்த நடை! அளகம் முதல்அடிக்கணைவரை-கவிஞர்க்கு புளகம் விளைக்கும்பொற்புடை வனிதை, சந்தனக் களபம் போலேகருங்குழல் மணக்கதுளபம் போலேதுளங்கும் புனிதை! (1-பக்:322-23) பாரதக் கதை முழுதும் ஒளிவீசும் ஐந்து விளக்கு போன்றவளாதலால் இவள் அறிமுகம் இன்றியமையாதது. 'யாயின்றிப் பிறந்த யட்சிணி. இவளை நினைந்தே பாரதி "பாஞ்சாலி சபதம்’ என்றே அற்புதமான தனிச் சிறுகாவியத்தையே தந்து தனிப்புகழ் பெற்றான். 37. உலூபி இவள் ஒரு நாகலோகக் கன்னிகை; அர்ச்சுனன் கங்கையாற்றில் இறங்கி நீச்சலிடுகையில் அவனை நாகலோகத்திற்குக் கடத்திச் சென்றவள். இவளை அறிமுகம் செய்யும் வாலியார்: ஐராவத நாக குலத்தின் அரசன் கெளரவ்யன்! அரசனாயினும்-ஆரும் அண்டுமளவு செளலப்யன்! அவனது அன்புமகள்அர்ச்சுனனை