உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விட்டெறிந்து பார்த்தாள்விவாகமாகாதவள்சுட்டெறிந்தசூரியனை நோக்கி! விழுந்தது-அந்த o வெளிச்ச மாங்காய்! அவள்கையில் அல்ல; கருப் பையில்! பையில் விழுந்தது-உடனே பிள்ளையென்றாகி-அவளது கையில் விழுந்தது! கன்னிகையில் ஏந்திய-கொழுந்து வெய்யில்... பீச்சியடித்தது-வெளிச்சப் பிரகாசத்தை, வனமேபிரதிபலித்தது-அதன் பிரகாசத்தை! மார்பில் கவசம்; மணிச் செவியில் குண்டலம்; அவை சிதறிய ஒளியோ-இன்னொரு சப்தரிஷி மண்டலம்! (1-பக். 214) ஈண்டு மந்திரம் என்பது துருவாச முனிவர் குந்திக்கு உபதேசித்த மந்திரம். மாங்காய் என்பது குந்தி பெற்றெடுத்த குழந்தை. இவை இரண்டும் உருவகங்களாக அமைந்து பொருள்களைத் தெளிவாக விளக்குகின்றன. வெளிச்ச மாங்காய்', 'கொழுந்து வெய்யில்', 'சப்தரிஷி மண்டலம் என்பவையும் உருவகங்கள் நிலையில் நின்று கவிதையைக் கவர்ச்சியுடையதாக்கிப் பொருள் தெளிவையும் புலப்படுத்துகின்றன.