உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்தப் பகுதியில் சொல் வீச்சில் உள்ள புகழ்நூல்பூனூல்', 'வானத்து நீலத்தை வழித்தது-கெளபினம் போல் கிழிந்தது என்ற சொல்லிணைகள் துருபதனின் புகழ் அதல பாதாளத்தில் வீழ்ந்ததைக் காட்டுகின்றன. அர்ச்சுனனின் அத்திர ஆற்றலையும் பிறவற்றையும் கண்டு மகிழ்ந்ததுருபதனின் மனஓட்டத்தைக் காட்டுவதாக வாலியார் கூறுவது: அவனொடு விற்போர் புரிபவர் வீரத்தை- அவனிடம் விற்போர் ஆவர்! அவனொடு மற்போர் புரிபவர் மண்டியிட்டு-அவன்முன் நிற்போர் ஆவர்! அவன் கொம்பில்லாத நந்தி! தும்பிக் கையில்லாத தந்தி ஆண்தகை ஆருமே அவனுக்குப் பிந்தி! அவனைப் பெற ஆற்றியிருக்க வேண்டும் தவம்... குந்தி-மணி உந்தி-நெடுநாள் முந்தி! (1-பக், 251) அற்புதமான சொல்வீச்சுகள். அவை நம் உள்ளத்தில் கல் வீச்சுகள்போல் விழுகின்றன. இப்பகுதியிலுள்ள விற்போர்-விற்போர், மற்போர்-நிற்போர், நந்தி-தந்திபிந்தி-குந்தி-உந்தி-முந்தி என்று ஒரே விதமான