பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கவிதையும் வாழ்க்கையும்


இப்படி உருண்டை உருண்டைகளாக எத்தனை உள்ளன என்று அவர்கள் ஆய்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஒரு சில புதிய கோளங்கள் அவர்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. எனினும், இந்த அண்ட கோளத்தின் எல்லையை அவர்கள் சென்று கண்டார்கள் என்று கூற முடியாது. இதுபற்றிய நூல்களெல்லாம் அவர்தம் ஆராய்ச்சிகள் பெருகிக்கொண்டே யிருப்பதைத்தான் குறிக்கின்றனவேயன்றி, முடிந்த நிலையைக் காட்டவில்லை-ஏன்?- என்றும் காட்டவும் இயலாது. அத்துணை விரிவுடையது அண்டகோளம்.

ஆராய்ச்சி வளர்ந்துகொண்டே போகிறது. அதன் எல்லையை இன்ன அளவிற்று என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆராய்ச்சியாளர் அவர்தம் ஆய்வுக்களத்தில் இரவும் பகலும் இருந்துகொண்டே புதிது புதிதாகக் கண்டு பிடித்த தொலை நாடி முதலிய சாதனங்களின் உதவியைக் கொண்டு ஆராய்ந்து கொண்டேயிருக்கின்றனர். 'அறிதோறறியாமை கண்டற்றால்' என்று திருவள்ளுவர் கூறியபடி அவர்கள் ஆய்வுக்களத்தில் அண்டகோளத்தின் அகலத்தைக் காணக் காண, அதுவோ மேலும் மேலும் விரிந்து கொண்டே போகின்றது. அந்த அண்டகோளத்தில் எண்ணற்ற உருண்டைகள் தொங்கிக்கொண்டே யிருக்கின்றன. அவற்றிற் கிடையிலுள்ள தூரத்தையும் அவர்கள் அளவிட்டுக் காண முயல்கின்றார்கள். அவ்வாறு முயன்று காணும்போது எத்தனையோ கோடிக்கணக்கான மைல்கள் கொண்ட இடைவெளி காணப்படுகின்றது, ‘சூரியன் இன்றேல், வாழ்வில்லை’, என்று எண்ணும் நம் உலகுக்கும் சூரியனுக்கும் இடையிலே எட்டுக் கோடிக் கல் இடைவெளியிருக்கின்றது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். சந்திரனுக்கும் நமக்கும் பல இலட்சக் கணக்கான கல் இடைவெளியிருக்கின்றதாம். சாதாரணமாக வாழும் நமக்கு இவையெல்லாம் வியப்பாக இருக்கும். ஆனால், ஆய்வுக்களத்தில் தம் வாழ்வையே, இத்தகைய ஆய்வுகளுக்கு என அர்ப்பணித்த அந்தப் பேரறிஞர்கள் - நல்ல ஆய்வாளர்கள் - ஆய்ந்து, அளவு தவறாமல், இவற்றைக் கண்டுபிடித்