பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கவிதையும் வாழ்க்கையும்


ஆனால், குழவியையும், கன்றையும், புழுவையும் சேர்த்தல் எப்படி என்று கேட்கலாம் அன்றோ! அதையும் உரையாசிரியர் விளக்குகின்றாரே! புழு மர இனத்தைச் சேர்ந்தது அன்றாயினும், அதுவும் உற்று அறியும் ஓரறிவுடைய உயிரன்றி வேறன்றே? ஆகவே, அதுவும் இவ்வினத்தில் சேர்க்கப்பட வேண்டுவது தானே? மற்றைய குழவியும் குட்டியும் குஞ்சும் எப்படி இவ்வின மாகலாம்? குழந்தை மனிதப்பிறவிதான். அது பிறந்ததும் ஆறறிவையும் பெற்றது என்று யாராவது கூறுவார்களா? அது அழைத்தால் கேட்டுப் பதில் உரைக்குமா? வாய் திறந்து பேசிச் சுவைக்குமா? மணப்பொருளை நுகர்ந்து மகிழுமா! மகிழா தன்றே? ஆகவே, அதுவும் அறிவு குறைந்த ஒன்றுதான். குழந்தையைப் 'பச்சை மண்' என்று இன்றும் வீட்டில் கிழவிகள் பேசிக் கொள்வதை அறியாமோ? ஆகவே, மண்ணைப் போன்று ஒன்றும் அறியாத குழந்தை என்பதைத்தான் இவர் ஓரறிவுடைய பிறவியில் அடக்கிப் பேசுகின்றார். பிற விலங்கின் குட்டிகளும் பறவையின் குஞ்சுகளும் இவ்வாறே எண்ணப்படுகின்றன. இவ்வளவு நுணுக்கமாக உயிர்த்தோற்ற வளர்ச்சி பற்றி இன்றைய மேனாட்டு ஆய்வாளர் இன்னும் காணவில்லை. எனலாம்.

இப்படியே இரண்டறிவு தொடங்கி, ஆறறிவுவரை உள்ள பிற உயிர்களையும் காணலாம். இவ்வறிவு ஒன்றோடொன்று சேரும்போது, சேரும் அனைத்தும் நீங்காது சென்றிருந்தால் தான், அப்பிறவி சிறப்படைந்ததாக மிளிரும். பின்னது சேரும்போது முன்னது நீங்கின் பயனில்லை. அதனாலேதான் ஒவ்வோர் அறிவையும் குறிக்கும்போது, 'முன்னையவற்றோடு' என்று மறவாது தொல்காப்பியர் குறிக்கின்றார். மனிதன் ஆறறிவும் பெற்றவன். ஆறாவது அறிவாகிய மனன் வழிப்பெற்ற அறிவினை அடைந்தபோதிலும், அவன் பிற செவி அல்லது நா அறிவு குறைந்திருப்பானாயின். முற்றிய அறிவுடையவன் ஆக மாட்டானே! எனவே, ஒன்றைப் பெறும்போது மற்றொன்று குறையின், அது அறிவுபெற்ற உயிர்வளர்ச்சியாக மாட்டாது. இவ்வாறே ஒவ்வோர் இன உயிரைப்பற்றியும் அவற்றைச்