பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

197


என்று. இவனை வழங்குவார்கள். உயிரினங்களை ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் மனிதனையும் மற்ற உயிரினங்களோடு சிறப்பாக விலங்கினங்களோடு-அவற்றினும் சிறப்பாகக் குரங்கினங்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்கின்றார்கள். அவர்கள் அவ்வாராய்ச்சிமூலம் பெரு வேறுபாடுகளைக் கண்டார்கள் என்று சொல்ல இயலாது. மனிதனது அறிவுநிலைக்கேற்ற மூளை என்னும் தன்மை மற்றவற்றினும் வேறுபட்டிருக்கக் காணலாம். இவ்வாறு மனிதனைப் பற்றி ஆராய்கின்ற ஆய்வாளர்கள், பலவகையில் அவன் தோற்றத்தையும், வளர்ச்சியையும், வாழ்க்கை முறைகளையும், ஆராய்ச்சி செய்கின்றார்கள். அவற்றுள் அறிஞர் மூன்றினை முக்கியமாகக் கொள்வர். முதலாவது, மனிதனின் உடற்கூறுகளையும், அமைப்புக்களையும், அவ்வுடல் பற்றிய பிறவற்றையும் பற்றிய ஆராய்ச்சிகளைக் காண்பது, இரண்டாவது, மனிதன் தோன்றிய நாள்முதல், இன்றுவரை, வளர்ந்துள்ள வளர்ச்சியைக் காண்பது. மூன்றாவது மனிதனுக்கே உரிய, தொல்காப்பியர் வகுத்துக்கூறிய மனஅறிவை, ஆராய்ந்தறிவது. இம்மூன்று வகையாலும், மனிதனை ஆராய்ந்தே. அவனைப் பற்றிய ஆய்வாளர்களெல்லாம் பலப்பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவ்வாறு ஆராய்ந்த முடிவிலேதான் அவர்கள் படிப்படியாக மனிதன் மற்றவற்றின் சம்பந்தத்தால், வளர்ச்சியடைந்து, இறுதியில், தன் மனஅறிவால் உயர்ந்து, தன்னைப் பற்றியும் மற்றவற்றைப்பற்றியும் அறியும் நுண்ணிய ஆற்றல் பெற்றுவிட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

மனிதனைப் பற்றி அறியும்போது பல உண்மைகள் வெளியாகின்றன. அவன் உடலும் உள்ளமும் எவ்வாறு உருப்பெற்றன என்பதைக் காண்கின்றோம். அப்படிக் கண்டறியும் போது, மனிதன் தன்னை அறிந்தவனாகின்றான். தன்னை அறியும். அதே நிலையிலே, இத்தரணியில் வாழும் வாழ்க்கையைப் பற்றியும், அதன் தோற்றக் கேடுகள் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் பெரிதும் அறிந்து, கொள்கின்றான். இயற்கையான இன்றைய வளர்ச்சியின் எல்லையில் நிற்கும் இவ்வுலகை அறிவ