பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

231


யனவாம். எட்டுத்தொகையுள் புறமும் பதிற்றுப்பத்தும் நீங்கிய மற்ற அனைத்தும் அகப்பொருள் பற்றினதாமே?

அகவாழ்வில் சிறந்து வாழ்வதைத்தான் வாழ்வின் குறிக்கோளாகத் தமிழர் கருதினர். ஆனால், அதே வேளையில் புறவாழ்வாகிய துறவறத்தை அவர்கள் பழிக்கவுமில்லை. திருவள்ளுவனார், 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை,' என்றார். அவ்வாறு திட்டவட்டமாக “ஏ”காரம் கொடுத்து அகவாழ்வைச் சிறப்பித்த அவர், புறவாழ்வை-துறவறத்தைப் பழிக்கவில்லை. அதற்கும் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார். நாட்டில் அகமும் புறமும் ஒன்றி வாழ்ந்தன; வாழ்கின்றன: வாழும்.

புறத்திணையில் காஞ்சி என்ற திணையை அமைத்து, ‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’. என்று உலக நிலையாமையைக் கூறி. அதனால் துறவறத்தை வற்புறுத்துகின்றனர் ஆசிரியர் என்பர். ஆனால், அந்தத் துறவும் எப்போது சிறக்கும் என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார்,

‘காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.’
(கற்பு. 51)

என்று காட்டுகின்றார். அங்கும் அகவாழ்வின் அடிப்படையில் இணை பிரியாதிருந்த காதன் மனையாளும் காதலனும் இருக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்துகின்றார். ஆனால், காதல் வாழ்வு நடத்த அன்று; சிறந்த செயலாற்றி மற்றவருக்குத் தொண்டு செய்ய. வடமொழிக் காவியங்களில் வரும் பல ரிஷிகளும் இவ்வாறே தத்தம் பத்தினிமாரோடு காட்டிடை வாழ்ந்ததாக அறிகின்றோம். எனவே, மக்கள் வாழ்வின் அடிப்படையே காதல் வாழ்விலேதான் அரும்புகின்றது. இக்காதல் இன்பத்தைத் ‘தானே அவளே தமியர் காணக் காமப்புணர்ச்சி இருவயின் ஒத்தல்’. என்று இறையனர் அகப்பொருள் காட்டுகின்றது. எனவே, ஒத்த பண்புடையார் இருவர்