பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

361



‘பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மக்கட்கு.
உண்டோ ஞாலத்து உறுபொருள்?’

என்று கேட்கும் நாகர் தலைவனை நோக்கிச் சாதுவன் மக்கள் வாழ்வு அந்த இரண்டினோடு அமைந்து விடவில்லை என்றும், அதற்கும் மேலான பண்பாட்டிலும் ஒழுக்க நெறியிலுமே அவ் வாழ்வு அமைந்துள்ள தென்பதையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றான். மேலும், உலகில் குற்றமற்றவராக வாழ வேண்டி, மக்கள் நீக்க வேண்டிய பத்துக் குற்றங்களையும், அவை தோன்றும் இடங்களையும் காட்டி விளக்கி, அற வாழ்வைப் புலவர் அமைக்கும் முறை சாலச் சிறந்தது. மனிதனிடம் ‘மனம் வாக்குக் காயம்’ என்ற மூன்றும் தொழிற்படுகின்றன. இம் முன்றின் வழியும் மனிதன் நல்லதும் செய்கின்றான்; அல்லதும் செய்கின்றான். அல்லதை நீக்கி, நல்லதைச் செய்ய வேண்டுமென்பதே அறிஞர் உலகுக்கு உணர்த்தும் அன்பு நெறி. திருவள்ளுவர் ஒவ்வோர் அதிகாரத்திலும் தனித்தனி இன்னின்னவற்றை நீக்க வேண்டுமெனவும், இன்னின்னவற்றைக் கொள்ள வேண்டுமெனவும், ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கு விளக்கிப் பேசுகின்றார். சாத்தனர் அவ்வள்ளுவர் குறட் கருத்தையெல்லாம் அடக்கி, இம் மனம், மொழி. மெய் ஆகிய மூன்றிலும் வரும் குற்றங்கள் இன்னின்ன என்று எடுத்துக் காட்டி, அவற்றை நீக்குபவரே முற்றிய பண்பாடு பெற்றவர் என்று குறிக்கின்றார். மனிதன் மனிதனாக வாழ வேண்டுமாயின், இவற்றை நீக்கி, எல்லோரும் வாழ வேண்டும் என்ற மெய்ம்மை நெறியறிந்து, அதன்படி தானும் வாழ்ந்து, மற்றவரையும் வாழவைக்க வேண்டும் என்பதே முடிந்த முடிபாகும்.


'கொலையே களவே காமத் தீவிழை
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று

க.வா.—23