பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

367


உலகில் வாழும் எல்லாச் சமயங்களும் மக்கள் நல்வாழ்வுக்காக ஏற்பட்டனவே. சமயக் கொள்கைகளும் அவற்றின் அடிப்படைகளும் ஏறக்குறைய ஒரே தன்மையனவாய் இருப்பதைத்தான் காண்கின்றோம். உலகமெல்லாம் வாழ வேண்டும், என்பதே சமயங்களின் அடிப்படை. எவ்வுயிரும் தம் உயிர்போல எண்ணிப் போற்ற வேண்டும் என்பதே அவற்றின் அறிவுரை. உலகில்,எந்த மூலைமுடுக்கில் வாழ்கின்ற மெய்ச்சமயமும் இந்த உண்மையைத்தான் வலியுறுத்தும். சமய உண்மைகளை ஆராய்ந்து பார்ப்பவர்கள், இந்த உண்மையைக் கண்டு எழுதியுள்ளார்கள். சமயப் பேராறுகள் நற்கொள்கையென்னும் ஒரே கடலிலேதான் சென்று சேர்கின்றன. எந்தச் சமயநெறியும் மாற்றானுக்குத் துன்பம் செய்' என்று கூறுவது எங்கும் காண முடியாத ஒன்று. ஆயினும், இன்று உலகிலே வாழ்கின்ற சமயங்களின் போக்குகளைக் காணின். இவையும் வாழ வேண்டுமா!' என்ற ஐய உணர்வு பிறக்கின்றது. சமயத்தால் உலகை வாழவைப்ப தன்றி, சமயத்தால் உலகையே நடுங்கச் செய்யும் பெரும்போர்கள் உண்டாகியிருக்கின்றன. இடைக்காலத்தில் உண்டான சிலுவைப் போர்களும் (Crusades), இன்றையை இந்தியா இரண்டு துண்டானதும், சமயவெறி காரணத்தால் அல்லவோ? அன்பால் உலகை அமைக்க வேண்டும்,' என்ற ஏசுவின் பொன்மொழியை ஏட்டில் படித்து, ஆலயங்களில் காலம் தவறாது வழிபாடாற்றும் அக் கிறிஸ்தவ சமயத்தார் வாழும் மேலை நாட்டிலேதான் ஒரு தலைமுறையில் மூன்றுபோர்கள் நடக்க வழியேற்படுகின்றது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் அணு ஆயுதம் முதலியனவும் அங்கேதான் செய்யப் பெறுகின்றன. அன்பு கூறிப் போற்றும் அல்லாவின் சமயத்தின் பேரிலேதான் அண்மையிலும் நம் நாட்டின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான கொலைகள் நடைபெற்றன. இன்று மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் எத்தனையோ சமயப் போராட்டங்கள் நடைபெற்றன. 'தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை,' என்ற சமரச உணர்வு தோன்றி வளர்ந்த நாட்டிலேதான் சமணர்