பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

369


கோயில்களும் சிறந்துள்ளன. சமண சமயத்தவர்களும் நாட்டில் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றார்கள். அச்சமயத்திலே நல்ல ஒழுக்கசீலராய்த் துறவியர் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணத் துறைகளுக்குச் செய்துள்ள தொண்டு அள்விடற்கரிது. அவர்தம் கவிதைகளிலே பல இன்றும் வாழ்கின்றன. அவர் செய்த் காப்பியங்களுள் சில மறைந்து போயினும், சில இன்றும் வாழ்கின்றன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் சமணசமயத்தவர் என்பர். கவுந்தி அடிகள் வாயிலாக இவர் அச் சமய உண்மைகள் பலவற்றை விளக்குகின்றார். சிந்தாமணியின் சமயம் பற்றிய பாடல்கள் நாடறிந்தவை. இப் பெருங்காப்பியங்களைத் தவிர, மற்ற இரண்டு பெருங்காப்பியங்களாகிய வளையாபதியும் குண்டலகேசியும் ஐஞ்சிறு காப்பியங்களும் சமண சமயத் தலைவர்கள் எழுதியனவே என்பர். இவை தவிர்த்து எத்தனையோ சிறு காப்பியங்களை அவர்கள் எழுதியுள்ளார்கள். இலக்கணத் துறையிலோ, நன்னுலும், காரிகையும்: சின்னூலாம் நேமிநாதமும், பிறவும் சமண சமயத்தவர் இயற்றியவைதாம். இவற்றைத்தவிர வேறு இசைநூல்களும் பிறவும் சமண சமயத்தவர் எழுதினரென அறிகின்றோம். இடைக்காலத்திலேயும் எத்தனையோ சமண நூல்கள் வெளி வந்துள்ளன. எனினும், ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணம் தமிழ் நாட்டில் குடத்துள் விளக்கெனவே அமைதி பெற்றுவிட்டது எனலாம்.

காலத்தால் மிகப் பிந்தி வந்த மகமதியமும் கிறிஸ்தவ முங்கூடத் தத்தம் சமய வளர்ச்சிபற்றிப் புத்தம் புதிய கவிதைகளை இயற்றியுள்ளன. மேலை நாட்டிலிருந்து சமயம் பரப்ப வந்த ஐரோப்பியப் பாதிரிமாருட் சிலர், தமிழில் சிறந்த புலமை பெற்றதோடமையாது, தமிழில் இனிய செய்யுள் இயற்றும் திறனும் பெற்றிருந்தனர், பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் இயற்றிய தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டுப் பெரும் புலவர் பலராலும் பாராட்டப் பெறுகின்றன. இன்னும் கிறிஸ்தவப் பெருமக்கள் எழுதிய இரட்சணிய யாத்திரிகம். இரட்சணிய சரிதம், கித்தேரி அம்மானை போன்ற காவியத்