பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

கவிதையும் வாழ்க்கையும்


ஒரு சாரார் பெருமுயற்சி செய்தும், அது மேன்மேலும் வளர்ந்து செல்வதன் காரணம், அது தமிழ்நாட்டு வாழ்வுக்கு ஒப்பச் செல்லும் கதையாக மாற்றப்பட்டமை எனலாம்.

தமிழ்நாட்டு மக்கள் கண் எனக் காக்கும் கற்பு, உடன் பிறப்பொற்றுமை முதலிய நல்ல இயல்புகளைக் கம்பர் அப்படியே தம் கவிதைகளில் காட்டியிருக்கின்றார். வடநாட்டு வால்மீகி இராமாயணத்தில் காட்டிய காட்சிகள் பல கம்பராமாயணத்தில் இல்லை. அதற்கு நேர் மாறாகக் கம்பர் தமிழ்ப் பண்பாட்டுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்பத் தம் காவியத்தை அமைத்துக் கொண்டார். இந்த அடிப்படையே அவர் இராமாயணத்தை இன்றும் வாழ வைக்கிறது. தமிழ் நாட்டில் தோன்றிய எத்தனையோ இலக்கியங்களும் இலக்கணங்களும் மக்கள் வாழ்வோடு பொருந்தாது நின்று, தம் போக்கில் மாறுபட்டு, பிற மொழி தழுவியும் பிற வாழ்க்கையை விளக்கியும் நின்ற காரணத்தால், அவற்றின் அடிச்சுவடுகூட அறிய முடியாமல் மறைந்தொழிந்தன என்பதை மேலே கண்டோம். ஆனால், கம்பராமாயணம் இவற்றிற்கு நேர்மாறாகப் பிற மொழியிலிருந்து மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட தாயினும், அது வாழ்வோடு பொருந்திய ஓர் இலக்கியமாகிவிட்டது. அதன் கவிதைகளில் பல கற்பனையிலும், முதல் நூல் கதைப்போக்கிலும் சென்றன என்றாலும், ஒரு சில, தமிழ் மக்கள் வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடிகளாய் அமைகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

கற்பு நிலை தமிழ்நாட்டின் தலையாய ஒன்று. அக் கற்பு. கம்பராமாயணத்தில் பேசப்படுகின்றது. பலப்பல இடங்களில் பற்பல கவிதைகளால் கற்பின் நிலையைக் கம்பர் எடுத்துக் காட்டுகின்றார், சீதையைப் பாத்திரமாக அமைத்துக் காட்டுகின்றார் கம்பர். சீதையை இராவணன் பற்றி ஈர்த்துப் பக்கத்தணைத்துக் கொண்டு சென்றான் என்று வால்மீகி கூறியதாக வடநூற் புலவர் கூறுவர். இவ்வாறான நிலை தமிழ்நாடு ஏற்காத ஒன்று. கற்புடை பெண்டிரைப் பிறர் தீண்டுவது குற்றம் என்று கண்டது. தமிழ்நாடு. அதற்கு மேலாக,