பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

கவிதையும் வாழ்க்கையும்


முதல் இருபத்தோராம் திங்கள் வரை சில பருவங்களை அமைத் துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம், நூறு பாடல்களைப் பாடுவர். அப்பாடல்கள் வெறுங் கற்பனைகளில் மிதப்பன வேயன்றி உலகினுக்கு ஏற்பச் செல்லா தன. அதனாலேயே அவை வழக்கிழந்து மறைகின்றன எனலாம்.

உலகிற் பிறந்த குழந்தையைத் தாலாட்டிப் பாலூட்டிச் சீராட்டாத பெற்றோர் இல்லை. விதம் விதமான தாலாட்டுப் பாடல்கள் பாடிப் பெற்றேர்கள் குழந்தைகளை மகிழ்வித்துத் தாங்களும் மகிழ்வார்கள். தாலாட்டுப்பாடாத தாயே இருக்க மாட்டாள். எனினும், இப் பிள்ளைத்தமிழில் வரும் தாலாட்டுப் பாடல்களை ஒருவரும் பாடுவதில்லை. ஏன்? அவ்வாறான பாடல் கள் இருப்பதே ஒருவருக்கும் தெரியாத வகையில் அவை தம் முடிவின் எல்லைக்குச் சென்று கொண்டேயிருக்கின்றன. தோன்றிய அந்நாளிலும் சரி, இன்றும் சரி, அவை வாழவில்லை என்றே சொல்லலாம். எங்கோ இரண்டொருவர் ஏதாவது தேர் விற்குப் பாடம் வைத்துவிட்டதால் படிக்க வேண்டுமென்ற கட்டாயத்துக்காகப் படிப்பார்கள். சில பாடகர்கள் இரண்டொரு பாடலை இசையோடு பாடுவார்கள். அவ்வளவு தான். அவை எல்லோருக்கும் தேவையான பாடல்களாயிருந் தும், ஏன் அவ்வாறு வாழாது கெடுகின்றன? ஒரே காரணம், அவை வாழ்வோடு பொருந்தாமைதான். பிள்ளைத்தமிழ் என்று பெரிய தமிழ் பாடியதாக நினைத்துக்கொண்டு, தமிழுக்கும் தொண்டு செய்தாகக் கூறிக்கொண்டு, தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் வாழ்வுக்கும் உணர்வுக்கும் தொடர்பற்றவற்றைப் பாடி மகிழ்வார்கள். இவ்வாறு மக்கள் வாழ்வுக்குத் தேவையான பாட்டாக இருப்பினும், அது வாழ்வுக்குப் பொருந்தாத வகை யில் வெறுங் கற்பனையில் மட்டும் மிதப்பதாயின், அது வழக் கழிந்து போதல் உறுதியேயாம்.

பிள்ளைத் தமிழைப் போன்றே தூது, கலம்பகம், சதகம் முதலிய பிரபந்தங்களும் பிற்காலத்தில் அதிகமாக எழுதப் பட்டன. என்றாலும், அவையும் மக்கள் வாழ்வுக்குப் புறம்பாக