பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால இலக்கியங்கள்

397


அமைந்தமையால் இந்த இரண்டொரு நூற்றாண்டுகளுக்குள்ளே இறுதிப் படியை நாடிப் புறப்பட்டுவிட்டன என்று சொல்ல லாம். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது. அதில் ஏதாவது செய்யுட்கோவையோ, பொருட்கோவையோ காண முடியாது. ஏதோ பாடல்களைச் சேர்த்து நூறு என்று கணக் கிட்டு, ஏதேதோ பொருள்களைப்பற்றிப் பாடி முடிப்பார்கள். தமிழ் நாட்டில் இல்லாத பல்வேறு பாகுபாடுகளை விளக்கி, அவரவர்களுக்கென்று தனித் தனித் தொழிலையும் பிரித்து, அவற்றை இயல்பாக்கி, அந்தணர் இயல்பு, வணிகர் இயல்பு, அரசர் இயல்பு, வேளாளர் இயல்பு என்று சாதியும் தொழிலும் பிரிக்கும் இழிதகைமைக் கவிதைகள் நாட்டில் வாழ முடியுமோ? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,' என்று மனித இனத்தை யும் கடந்து, எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பிணைக்கும் பெரு நெறி பிறந்த நாட்டிலே சாதி வேறுபாடுகளையும், பிற வேறு பாடுகளையும் கற்பித்துக் கூறும் எந்தக் கவிதைதான் வாழ முடியும்? மேலும், வாழ்வுக்குத் தேவையற்ற சடங்குகளையும்ஏன்?-சகுனங்களையுங்கூட வரையறுக்கும் பாடல்கள் சதகங் களில் இடம் பெற்றுள்ளன. பிரபந்த வகையில் உலா என்பது ஒன்று இருக்கின்றது. அதில் பெண்கள் வருணனை படிப்பதற்கு இன்பமாகத்தான் இருக்கும். எழுவகைப் பருவத்திலும் உள்ள பெண்களையெல் லாம் சித்திரிக்கும்போது நன்கு அமைந்தது போலத்தான் அப்பிரபந்தம் தோன்றுகின்றது. எனினும், அது சிறந்து வாழ வில்லை. காரணம் என்ன? அப்பெண்களின் அழகைப் பலவகை களில் விளக்கிக்காட்டும் ஆசிரியர்கள், அவர்கள் போக்கை விளக்கும் காலத்து, உலக வாழ்க்கைக்கப்பால் செல்கின்றார் கள். தாங்கள் ஒரு தலைவனைச் சிறப்பிக்க விரும்பினால், அவனை முன்னிறுத்தி அவனுக்கு இத்தனை பெண்களது கற்பினையும் காணிக்கையாகப் பலியிடுவர். அத் தலைவன் தெருவில் பவனி வருவதாகவும், அவனைக் கண்ட காரிகையார் கருத்தழிந்து, உடை நெகிழ, உணர்வு கெடத் தம் வசம் இழந்து அவனை நாடும் நிலையில் மானமழிந்து மதி கெட்டு நிற்பதாகவும்