பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால இலக்கியங்கள்

399


எழும்பும். ஆனால், பாவம், அப்போதே அது மங்கி மறைந்து விடும்! இன்னும் வசை பாடலும், வழி நடைப் பாடலும் பிற வகைப் பாடல்களும், இக்காலத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன. அவையெல்லாம் ஒரு சிறிதும் வாழ்வோடு பொருந் தாத வகையிலே அமைந்தனவாகும்.

தமிழ் நாட்டில் எத்தனையோ வழக்காறுகள் இடம் பெற்றன. பிற நாட்டுப் பழக்க வழக்கங்கள் நாட்டில் குடிகொண்டன. அதைப்போன்றே பிற நாட்டு இலக்கியங் களையும் மொழிபெயர்க்க வேண்டும் என்று சிலர் விரும்பினர். அவ்வாறு மொழி பெயர்க்கவும் செய்தனர். தூது முதலிய பிரபந்தங்கள் வடமொழிச் சந்தேசங்களின் வழி வந்தனவோ என்றுகூடச் சிலர் ஐயமுறுவர். தவிர, சில தோத்திரப் பாடல் களும் இக்காலத்திலே தோன்றின. அருணகிரிநாதர் திருப் புகழ், பட்டினத்தடிகள் பாடல் போன்ற சில தோத்திரப் பாடல்கள் நாட்டில் தோன்றின. அவையெல்லாம் வாழ்வைப் பாராட்டி, மக்கள் வளம் பெறத்தக்க வழி துறைகளை வகுக்கா மல், எங்கோ சென்ற காரணத்தினாலே-மக்கள் வாழ்வோடு பொருந்தாத காரணத்தாலே-சிறந்து போற்றப்படாமல் எங்கோ சிலர் கைப்பட்டு நின்றுவிட்டன. சில அழிந்தும் ஒழிந்தன.

இக்காலத்தில் எழுந்த சில நாடோடிப் பாடல்களும், இரண்டொரு கவிதைத் தொகுதிகளும் மட்டும், அவை வாழ் வோடு ஒரளவு பொருந்திய காரணத்தால் ஒரு வகையில் வாழ் கின்றன எனலாம்.

இவ்வாறு பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் எத்தனையோ வகையான இலக்கியங்கள் தோன்றின போதிலும் அவை பெரும்பாலும் மக்கள் வாழ்வோடு தொடர்பு கொள்ளா வகையில் தனித்து நின்றதோடு, இல்லாத கற்பனைகளையெல் லாம் புகுத்தி, அக்கற்பனைகளைச் சொல்லடுக்கால் சிறப்பிப்பதே தம் வீரச் செயல் என்று கருதிய புலவரால் பாடப்பட்டமை யின், அவற்றின் வாழ்வும் வெறுங்கற்பனையாகவே கழிந்