பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கால இலக்கியங்கள்

403


அவர் பின்னே வந்த மற்றோருவர் பாடியுள்ளார். அக் கவிஞர் அடிமை நாட்டுக்கு விடுதலை பெற விரும்பிப் பலப்பல பாடல் களை எழுதினார். அவர் பாடல்கள் அன்றைய அடிமை நாட்டுக்கு உணர்வை ஊட்டின. அடிமை வாழ்வில் அஞ்சிச் சாகும் நிலை மாறி அஞ்சாமை பெற வேண்டிய அவசியமும், அதன் வழி ஆளும் வர்க்கத்தார் நாட்டை விடுதலை செய்து தம் நாட்டுக்குச் செல்ல வேண்டிய நெருக்கடியையும் உண்டாக்க வேண்டும் என்றார். அவர் பாடிய பாடல்கள் பல.

'அஞ்சுவது யாதொன்று மில்லை
 அஞ்ச வருவதும் இல்லை.'

என்று ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பாடிய அடியை எண்ணியோ, அன்றி ஆங்கிலேயர்தம் கொடுமை கருதி நைந்தோ, உறங்கும் உள்ளங்களை யெல்லாம் தட்டி எழுப்பும் வகையில் நன்கு பாடியுள்ளார்.

'உச்சி மீது வானி டிந்து வீழ்ந்து விட்ட போதிலும்
அச்ச மில்லை அச்ச மில்லை அச்ச மென்ப தில்லையே!”

என்று தம் உள்ளம் வீறுபெற்ற தன்மையை விளக்கிப் பாடும் போது, எல்லாத் தமிழரும் நிமிர்ந்து நின்றிருப்பார் அன்றோ!

பாரதியார் அன்றைய நாட்டுச் சமுதாயத்தை நன்கறிந்து கொண்டார். சமுதாயத்தில் எவ்வெவ்வாறு மக்கள் வாழ்விழந்தும், வறுமையுற்றும் வாடுகின்றார்கள் என்பதையும், இந்திய நாட்டு மக்கள் உரிமை வாழ்வு அற்று. மிருகங்களிலும் கீழாக நடத்தப்படுவதையும் உள்ளத்தால் உணர்ந்து கொண்டார். அந்த உணர்ச்சி வழியே உதட்டில் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடி வந்தன. தமிழ் நாட்டிலும் வட நாட்டிலும் உரிமை வாழ்வு மலரப் பாடுபட்ட பல பெரியவர்தம் திருவுருவங்கள் அவர் கண்முன் நிழலிட்டன. இந்திய நாட்டு மக்கள் பிற நாடுகளில் வெள்ளை முதலாளி