பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கால இலக்கியங்கள்

405


பாடுவாரைக் காணோம். காரணம், அத்தகைய பாடல்கள் எல்லாக் காலங்களுக்கும் ஏற்புடைய பாடல்களாக அமை யாமையேயாம். சங்க காலத்தில் உணர்ச்சி மிக்க, விடுதலை விரும்பிய பாடல்கள் உள்ளன. அவை இன்றும் போற்றப் படுகின்றன. காரணம், அவை ஒரு தனி மனிதனுக்கோ, நாட்டுக்கோ, சமுதாயத்துக்கோ, ஒரு காலத்துக்கோ அமைந்த வெற்று உணர்ச்சிப் பாடலாக அமையாது, பொதுவாக மக்களினத்துக்கே நீதி புகட்டும் பாடல்களாய் அமைந்தமையே.

வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர், தம் பழஞ் செய்க் கடனை விடுத்துக்கொண்டதுடன் உலகம் நலம் பெறவே பாடிய ஒரு பாட்டுப் புறநானூற்றில் உள்ளது¹ என்பதை மேலே கண்டோம்.

அதைப்போன்று பாரதியார் விடுதலை வேட்கைப் பாடல் களைப் பொதுப்பட, எல்லார்க்கும் என்றும் பொருந்தியனவாகப் பாடியிருப்பாராயின், அவை என்றென்றும் வாழும். அவர் அவ்வாறன்றி, ஆங்கிலேயரையும் நம் நாட்டவரையுமே நினைத்து நினைத்து விடுதலை வேட்கை உணர்ச்சியும் வெறி யுள்ளமும் உந்தப் பாடியனவாதலின், இன்று விடுதலை பெற்றபின் சொந்த நாட்டிலேயே அவை பாடப்படாமல் மங்கி விடுகின்றன. ஆனால், அதே வேளையில் அவர் பொதுவாகத் தமிழ் பற்றியும், நாட்டு வாழ்க்கை பற்றியும், காதல், கடவுள் நெறி முதலியவற்றைப் பற்றியும் பாடிய பாடல்கள், இன்றும் மக்களால் பாராட்டப் பட்டும், மேற்கோள்களாக எடுத்தாளப் பட்டும் வருகின்றன. அவை என்றென்றும் பாரதியாரை வாழ வைக்கும் என்பது உறுதி.

கடந்த நூற்றாண்டின் பிற்காலத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரைப்பற்றியும் இங்கு நினைத்தல் வேண்டும். அவர் பாடல்கள் சமயம் பற்றியவாயினும், அவற்றின் இடை


1. இந்நூல் பக்கம் 317 (புறம். 35)