பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளை எடுத்தாண்டு மேடைகளில் பேசினார்கள். இப்படி எல்லாம் இந்த அங்கீகாரம் நிலைத்திருக்கிறது என்று கருத முடிகிறது. பாலா. தமிழ்க்கவிதையில் உங்களுக்கு இயல்பாக ஈடுபாடும் அக்கறையும் இருந்ததால்தான் உங்களால் கவிஞனாகவரமுடிந்திருக்கிறது. உங்களை கவிஞனாக மாற்றிய சூழலில் யாராவது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கவிஞர்கள் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தார்களா? உங்களை அதிகமாகப் பாதித்த தமிழ்க் கவிஞர்யார்? - மீரா: பாரதிதாசன்தான் என்னை அதிகமாகப் பாதித்தவர். அவருடைய கவிதைகளிலிருந்த அரசியல் உணர்வு, மொழியுணர்வுகள் என்னையும் ஈர்த்து விட்டது. எனக்கும் அந்நேரத்தில் அரசியல் ஈடுபாடு இருந்ததும் ஒரு காரணம். இன்னும் சொல்லப் போனால் பாரதிதாசனைப் படித்த பிறகுதான் பாரதியிடம் கூட அதிக நெருக்கமாகப் போனேன் என்றே சொல்லலாம். பாரதிதாசனுடைய கவிதைகள் அன்றைக்கு எனது நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்ததால் அவரே எனது முன்னோடி என்றும் கூறலாம். என்னோட கவிதைகளில் ஆரம்ப காலத்தில் பாரதிதாசனது பாதிப்பு இருந்தது என்று நண்பர்கள் சொல்வார்கள். எனது முதற் கவிதைத தொகுப்பான 'இராசேந்திரன்கவிதைகள் 1966-ல் வெளிவந்தபோது கூட சில பத்திரிகைகள் பாரதிதாசனைப் போல் எழுதுகிறார் என்றே விமர்சனம் செய்திருந்தன. H2