பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா: ஆக. பாரதிதாசன் என்ற கவிஞர் உங்களை உருவாக்கியதற்கு ஒரு முக்கிய சக்தியாக இருந்திருக்கிறார். பாரதிதாசன் என்கிற ஒரு கவிஞரால் இன்னொரு கவிஞரை உருவாக்க முடிந்திருக்கிறது. ஒர் இயல்பான அக்கறை யுள்ள கவிதையுணர்வு மிக்க ஒருவனுக்கு, அவனை சரியான வடிவத்தில் ஒரு கவிஞனாக வடிப்பதற்கு, இன்னொரு கவிஞன் பயனாக இருக்கிறான். இன்றைக்கு எழுதக்கூடிய இளைஞர்களுக்கு கவிதை என்றால் என்ன? கவிதையின் பலவிதப் பரிமாணங்கள் என்னென்ன? எந்த விஷயங்கள் ஒரு சரியான கவிதையை அமைத்துக் கொடுக்கிறது? யார் யாரெல்லாம் நல்ல கவிஞர்கள்? என்பதை நீங்கள் சொன்னால், அது பின்வரும் கவிஞர்களுக்கு பாதை போட்டுத் தரும். அவர்களே புதுப்பாதை, தனிப்பாதை போடவும் ஊக்கம் தரும். தமிழில் கவிதை எழுதற எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பெரிய சிரமம், இதுக்கு முன்னாடி நிறைய நல்ல கவிஞர்கள் இருந்ததுதான் இல்லையா? கம்பன், இளங்கோ, வள்ளுவன் போல மிகப் பெரிய கவிஞர்கள் நமக்குமுன் இருந்திருக்கிறார்கள். இந்த வளஞ்சார்ந்த மரபில் கவிதை எழுத வரும் ஒர் இளங்கவிஞனுக்கு நம்மரபு பலமா, பலவீனமா? மீரா: மலையாளத்தில் தகழியைப் போன்றவர்கள் கூடச் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் வருஷத்துப் பாரம்பரியம் இருப்பதே அந்த மொழியின் சிறப்பு - பெருமை என்கிறார்கள். மரபில் திருவள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற I 3