பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெல்லாம் புதுப் புதுக் கோணத்தில் வடிக்கப்படுகிறது எனில் முதலில் தோன்றிய அகலிகை கதைதானே எல்லா சிந்தனைகளுக்கும் ஊற்றாக இருக்கிறது. பாலா: நமக்கு ராமாயணம், மகாபாரதம் இருப்பது ஒரு அலெட்தான். மகாபாரதம், ராமாயணம் போன்ற வற்றில் உள்ள கிளைக் கதைகளை வைத்துக் கொண்டு நம்முடைய சமூகத்துக்குத் தகுந்த மாதிரி ரீமேக் பண்ணி நிறைய செய்து கொண்டே வருகிறோம். உதாரணமா அகலிகை கதையை வைத்துக் கொண்டு 'அகலிகை இன்னும் காத்திருக்கிறாள்' என்று சிற்பி எழுதியது மாதிரி, ஞானி கல்லிகை என்று எழுதியது மாதிரி... மீரா நீங்க சொல்வது இந்த இடத்தில் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. கவிதை எழுதுவது எப்படி என்றால் இளங்கவிஞன் ஒருவன் நம்முடைய புராணங் களையும், நமது பழைய காப்பியங்களையும் படிக்கும் போது எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் அவனுக்குச் சொல்லித் தரமுடியாது. அவனுக்கு என்ன சொல்லலாம் என்றால் இதே அகலிகை கதையை வால்மீகி எப்படிக் கையாண்டான்,கம்பன் எப்படிக் கையாண்டான், பின்னாளில் புதுமைப் பித்தன் தன் சிறுகதையில் எப்படிச் சொன்னார், ஞானி 'கல்லிகை"யில் எந்தப் பார்வையில் அகலிகையைப் பார்த்தார். சிற்பி அகலிகை இன்னும்காத்திருக்கிறாள் என்று புதிய கோணத்தில் சொன்னது... 17