பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது முயற்சிக்குத் தடைக்கல்லாகவும் ஆகிவிடக் கூடும். பழைய பேரிலக்கியங்கள், எல்லாம் பலமா, பலவீனமா என்பது அவரவர் அணுகுமுறையைப் பொறுத்தது. . - கம்பனைப்போல் இளங்கோவைப் போல் வள்ளுவன் போல் பூமிதனில் எங்கேயும் கண்டதில்லை என்று சொல்லி வியந்த பாரதியே, ஒரு மாஸ்டர் ஆகிவிட்டான். பாரதிதாசன் என்கிற பெயரைவைத்துக் கொண்டு, பாரதியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகப் பாரதிதாசனால் கவிதை எழுத முடிந்தது. பாரதியினுடையதாசன் என்று சொல்லிக் கொண்டாரே தவிர, தனது எழுத்தாலும் சிந்தனையாலும், கவிதைகளாலும் அவர் dr ILI LD TOUTSI TITS, சுப்புரத்தினமாகத்தான் இருந்திருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம். . - - ஒரு கவிஞனுக்கு மற்ற கவிஞர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. தன் தனிப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் அது உதவும். நல்ல கவிஞர்களைத் தேடிப் படிப்பது... நமது நாட்டின் பழமையான இலக்கியங்களைக் கற்றுக்கொள்வது... இவை முதல்படி. பாரதியிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொண்டு தனித்துவம் உள்ள கவிஞராக பாரதிதாசன் இருந்திருக்கிறார் என்றால் அவருக்குள் சில விசேஷமான திறமைகள் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இதுமாதிரி சிறப்பான திறமைகள் இருந்தால்தான் அவன் கவிஞனாக இருக்க 19