பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். இந்த இயல்பானதிறமைகளைக்கருதித்தான், கவிஞன் என்பவன்பிறக்கிறான் என்று சொல்கிறோம். பிறக்கிறான் என்று சொல்லும் போது கவின்தயானது அவனை மலர்த்திக்கொண்டு சிந்தனையைப் பூரணப்படுத்திக் கொண்டுவருகிறது... எவ்வளவுதான் கற்றுக் கொண்டாலும், அவனுக்குள் கவிதை ஊற்று இருந்தால்தான்கவிதை புறப்பட்டுவரமுடியும். இந்தக் கவிதை ஊற்று இருக்கிறவன் பழைய கவிஞர்களிட மிருந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள்உள்ளன. யாருக்கு மரபு பலமாகிறது என்றால், யாருக்கு உண்மையிலேயே ஒரு கவிதையுணர்வு நெஞ்சிலே இருக்கிறதோ, அவனுக்குப் பலமாகி அமைகிறது. அந்தப் பலம் பல புதிய கவிதைகளைக் கருக்கொள்ள உதவுகிறது. . . - ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தகுதியை ஏற்படுத்தியது மாதிரி - பி.ஏ.வில சேரணும்னா ப்ளஸ் டு பாஸ் செய்திருக்கணும்கற மாதிரி, ஒரு கவிஞனாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்க லாம். ஆனால் அதற்குத் தகுதியாக கவிதை உணர்வு என்பது அவனது மனசுக்குள் இருக்க வேண்டும். அந்தக் கவிதையுணர்வு என்பது எது? அந்தக் கவிதையுணர் வுள்ளவனாக யாரை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்..? பழைய காலத்திலே நம்முடைய புலவர்கள் எல்லாம் ஒரு நல்ல கவிதையை எழுதவேண்டும் என்றால் இலக்கணம் கற்றுத் தான் எழுதவேண்டும் என்று நம்பினார்கள். 'காரிகை கற்றுத்தான் கவி புனைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி முறையாக இலக்கணம் கற்றுக் கொண்டுவிட்டால் 20