பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா. அந்தக்காலம் பேப்பர் பேனா இல்லாததால் எல்லாவற்றையுமே நினைவில் வைத்துக் கொள்கிறதற் கேற்றாற் போல சின்னச் சின்னச் செய்யுளாகச் செய்யத் தொடங்கினார்கள். எதையுமே விரிவாகச் சொல்ல முடியாமல் போனது, விரிப்பின் பெருகும் விரிவஞ்சி விட்டு விடலாம்' என்றெல்லாம் கூட நூற்பாக்கள் தோன்றியதற்குக் காரணம் உரைநடை வளர்ச்சி இல்லாமலிருந்ததுதான். மீரா. ஆனால் இன்றைக்கு அது தேவையில்லாமல் போய்விட்டது. கவிதையைக் கூட உரைநடையில் சொல்லலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. பாலா: தாகூர் கவிதையைப் படிக்கிறோம். உமர் கய்யாம், கலீல் ஜிப்ரான், மொழி பெயர்ப்புக் கவிதைகளைப் படிக்கிறோம். ஆனால் இவை யாப்பிலே எழுதப்படாமல் உரைநடையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் படித்தவுடனேயே அது கவிதை என்று நம் மனசுக்குள் மரியாதை ஏற்பட்டு விடுகிறது. இவர்களது கவிதைகளை நாம் யாப்பு மூலம் பார்க்கவில்லை. யாப்பு என்கிற அந்தக்கட்டமைப்பே இல்லாமல் அவர்கள் கொடுத்த அந்த விஷயத்தை ஒரு மொழிபெயர்ப்பாளன் எப்படிக் கொடுத்தானோ, அந்த வசன நடையிலேயே அது நம்மை ஆட்கொண் விடுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கிறபோ, கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை. கவிதை ஜெயிப்பதற்கு இலக்கணம் ஒரு பொருட்டில்லை என்று தோன்றுகிறது. -