பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா: வசன கவிதைகளிலிருந்து அடுத்த பரிணாமமாகப் புதுக்கவிதை வளர்ச்சியடைந்துள்ளது. மணிக்கொடி காலத்தைப் பார்த்தால் கு.ப.ரா. பிச்சமூர்த்தி ஆகியோர் எழுதிய கவிதைகள் கூடப் புதுக் கவிதைகளாக இல்லை, வசன கவிதைகளாகத் தானிருந்திருக்கிறது-வடிவத்தைப் பொறுத்த வரையில், பாரதியார் கூட வசன கவிதை முயற்சியைத் தொடங்கி வைத்துப் போனார். பாரதியார்காலத்திலேயே வால்ட் விட்மனின் கவிதைகளின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. கலீல் ஜிப்ரானது தாக்கமும் உமர் கய்யாமின்தாக்கமும் இருந்திருக்கிறது. தாகூர்நமக்குப் பக்கத்திலேயே வங்காளத்திலே இருந்ததாலே அவரோட கவிதைகளும் தமிழ்நாட்டில் பரவலாகப் படிக்கப்பட்டது. இவையெல்லாம் வாசகர்களுக்கு ஒரு ரசனையை உண்டு பண்ணியிருக்கின்றன. கவிதைக்கு கவித்துவம் மிக முக்கியம். இலக்கணம்தான் முக்கியம் என்று முதலிலிருந்த பிரமை உடைந்திருக்கிறது. இலக்கணம் என்ற பிரேமிற்குள் இருந்தால் தான் அழகு என்பதில்லை. ஓர் அழகான படத்தை சட்டம்’ போட்டு மாட்டினால்தான் அழகு என்பதில்லை. பிரேம் போடாமலேயே அழகான படம் அழகாகத்தான் தோன்றும். வேறுவிதமாகத் தோன்றாது. பாலா. ஒவ்வொரு பாவினத்துக்கும் ஒரு ஒசையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயல்பாகவே நிர்பந்திக்கப்பட்ட இலக்கணப்படி, இது 'செப்பலோசையில்தான் அமைய வேண்டும் என்று இலக்கணப்படி எழுத வேண்டியது கட்டாயமா? 24