பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாவற்றிலுமே ஒரு மரபு இருந்து வருகிறது. நம்முடைய மரபு என்பது, திருவள்ளுவரது கருத்து, இளங்கோவடிகளின் கருத்து, கம்பனது கருத்து என்று இதுதான் மரபா? அல்லது கம்பன் கையாண்ட விருத்தம், புகழேந்தி கையாண்ட வெண்பா, இது மரபா என்று இன்றைக்கு ஒரு குழப்பம் புலவர்களிடம்கூடக் காணப்படுகிறது. மரபு என்றால் இலக்கணம். இலக்கணப்படி இருப்பது மரபுக்கவிதை என்கிறார்கள். மரபையும் இலக்கணத்தையும் Equate பண்ணி சரிநிகர் சமானமாக ஆக்கிவிடுகிறார்கள். மரபு என்பது இதுமாதிரி இருக்க முடியாது என்று நான்கருதுகிறேன். மீரா: வெறும் இலக்கணம் மட்டும் மரபு கிடையாது. ஒரு சமுதாயத்தில் தொன்மைக் காலத்திலிருந்து தோன்றி வந்த சிந்தனைப்போக்கு, இந்த மொழிக்கேயுரிய தனித்தன்மையோடு கூடிய சில பார்வைகள், இதெல்லாம் வழிவழியாகத் தொடர்ந்து வருகிறது. - பாலா. அவள் அன்னம் போல் நடந்தாள்’ என்று ஒரு பெண்ணின் நடைக்கு உதாரணம் சொல்வது. கூட மரபுதானே. நமது மரபு இதை அணி இலக்கணத்தில் சேர்க்கிறது. இந்த மரபான சிந்தனைகளை நாம் வைத்துக் கொள்ளலாமா அல்லது இந்த மரபுகளை மீறுவது தப்பில்லையல்லவா? மீரா: தாராளமாக மீறலாம். அன்றைக்கிருந்த குழலுக்கு அன்னம்போல் நடை' என்ற உவமை சரியாக இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு இது 28