பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தமில்லாமல் எடுத்துக் கொண்டு எழுதுவது சிறப்பாக இருக்காது. பாரதியே தான்படுகிற பாட்டை 'நாள் ஒன்று போவதற்குள் நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறிபடுமோ யார் படுவார்?" என்று பாடும்போது தாளம் படுமோ. தறிபடுமோ. என்ற உவமைகளைப் பார்த்தால் பாரதியின் பிறந்த ஊரான எட்டையபுரத்தில் நெசவாளர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். தறி நெய்து கொண்டிருந்தார்கள். அவனது வீட்டுக்குப் பக்கத்தில் யாராவது ஒரு தவில் காரரோ மேளகாரரோ இருந்திருப்பார். இந்த ஓசைகள் அனைத்தும் அவன் காதில் விழுந்து விழுந்து கவிதையில் உவமையாகியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். - பாலா: ஒரு கவிஞனின் வெளியீட்டுப் பாணி - அதாவது ஒரு விஷயத்தை அவன் சொல்கிற முறை இருக்கிறதே, இதில் பழைய இலக்கணங்கள்.அவனுக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கின்றன. புகழ்ச்சியின் மூலமாக ஒருவனைக் கிண்டல் பண்ணலாம். கிண்டல் பண்ணியும் புகழலாம் ... இப்படிப் பல்வேறு "டெக்னி"க்குகளைத் தொகுத்து வைத்திருக்கிறது இலக்கணம். இதை மீறுவதும் மீறாததும் அவரவருக் குள்ள சொந்தத் தேர்வு என்று விட்டு விடலாம். சில சமயங்களில் மரபை எடுத்துக் கொள்வது நமக்குச் செளகரியமாகவும் பலமாகவும் இருக்கிறது. சில 31