பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய மரபுதான் புதிதாக் கவிதை எழுதுகிறவர் களுக்குப் பயன்படக் கூடியது. ஒரு மொழியின் இலக்கிய மரபை அது எந்த மொழியாக இருந்தாலும் அவன் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மீரா: எல்லாமரபையும் கூட பயன்படுத்தத் தெரிந்து பயன்படுத்துகிறவர்கள்தான் வெற்றியடைகிறார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. இலக்கண மரபு கூட பயன்படுத்தத் தெரிந்தவர்களின் கைகளில் போனால் அதுவும் சிறப்பாகவே அமைந்து விடுகிறது. திருப்பள்ளியெழுச்சி என்பதும் ஒரு இலக்கிய வகைதான். மாணிக்கவாசகர், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் பாடியிருக்கிறார்கள். அதையே பாரதியார் மாற்றி, சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பாரதமாதாவுக்குத் திருப்பள்ளிட் யெழுச்சி பாடுகிறார். பாலா: பாரதியின் காலம் இலக்கணத்தை மாற்றலாமா வேண்டாமா என்று எண்ணிய Transition Period’. அதனாலதான் அவர் நவரத்ன மாலையெல்லாம் பாடுகிறார். மரபுப் படித்தான்பாடிக் கொண்டிருக்கிறார். அவர் கூட அரசியல் கருத்துக்களைச் வசனகவிதை உருவில் சொல்வதற்கு ரொம்பவும் சங்கடப்பட்டு மரபுக்கு ஒதுக்கிவிட்டார் போலிருக்கிறது. எப்படி தாகூர் ஆன்மீகமான கருத்துக்களை கீதாஞ்சலியில் சொல்கிறாரோ, அதே மாதிரி ஆன்மிகமான எண்ணங்களுக்கு வசன கவிதையை ரிசர்வ் செய்துவிட்டு, எரிகிற பிரச்னைகளையெல்லாம் பாரதி மரபிலேதான் 33